SWAMI SARANAM...GURUVE SARANAM....






     மனதிற்கு மகுடம் உன் நினைவுகள் 
கனவுக்கு உயிர் சேர்க்கும் உன் நினைவுகள்
சலசலக்கும் ஓடையும் உன் புகழ் பாடும் 
முணுமுணுக்கும் அது உந்தன் பெயரை
மலரிருந்தால் மணமுண்டு பாலகா
நீயிருந்தால் நான் இருப்பேன் ஐயப்பா
இன்பப் பூக்கள் பூக்கும்
துன்பப் பூக்கள் வாடும் பாலகர்
 உன் அருளுக்கு முன்னே
இருள் விலக ஒளி தெரியும் உன் 
அருள் கிடைத்தால் எம் மன இருள் விலகும்
கண்களிலே உன் உருவம் 
காண்பதெல்லாம் உன் காட்சி 
எந்தனுக்கு இதைத்தவிர வேறு எது தேவை.
வண்ணங்கள் தந்தாய் வாழ்க்கையாக 
எண்ணத்தில் நிறைந்தாய் வார்த்தையாக
கண்ணுக்குள் மழையாகி 
நெஞ்சத்தில் அருள் உணர்வாகி 
உதிரத்தில் கலந்திட்ட உறவே
பன்வேல் வாழும் என் பாலகனே


No comments:

Post a Comment