SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE " THIRUVAADIRAI STAR " TOO MAY LORD SHIVA REMOVE ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & MAY YOU BE BLESSED WITH A DELIGHTFUL .. SUCCESSFUL & A PROSPEROUS LIFE AHEAD . " OM NAMASHIVAAYA "





"ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன் 
பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன் போது 
இயலும் முடிமேல் புனலோடு அரவும் புனைந்த வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே “ ( திருஞானசம்பந்தர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சனிக்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரமும் கூடிவருவது சிறப்பு .. மகாதேவரும் பெரும் ஜோதி சொரூபரும் எல்லையற்ற தேஜசையுடையவருமாகிய நடராஜப்பெருமானைப் போற்றித் துதித்து மனதில் நிம்மதியும் அனைத்து கலைகளிலும் தேர்ச்சிபெற்று ஓர் உயர்ந்த அந்தஸ்தினைப் பெற்றிடவும் ..ஆடல்வல்லானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் சித்ஸபேசாய வித்மஹே !
சிதாகாசாய தீமஹி !
தந்நோ ப்ரசோதயாத்
திருவாதிரை நட்சத்திரத்தின் அதிதேவதை ருத்திரனாகும் .. அதனால் இதற்குச் சிறப்பு ஓங்குகிறது 
சிவபிரானை ஆதிரை முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் போற்றுகின்றோம் ..
சிவபெருமான் அருவம் .. உருவம் .. அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் வழிபடப்படுகிறார் .. 
அருவம் என்பது - உருவமற்ற நிலை ..
உருவம் என்பது - கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை 
அருவுருவம் என்பது - உருவமும் அருவமும் கலந்தநிலை .. இம்மூன்று நிலைகளும் உள்ள திருத்தலமாக சிதம்பரம் உள்ளது .. 
அருவ நிலைக்கு சிதம்பர ரகசியமும் .. 
உருவநிலைக்கு - நடராஜரும் 
அருவுருவ நிலைக்கு - மூலவர் மூலட்டானேஸ்வர லிங்கவடிவிலும் இங்கு அமைந்துள்ளார் ..
நடராஜனின் திருப்பாதங்களில் வேதங்கள் சிலம்பாக ஒலிக்கிறது .. 
வலக்கை - டமருகம் இசைக்கிறது 
இடக்கை - அக்கினியைத் தாங்கியிருக்கிறது .. 
அவரின் சிவந்த இதழ்கள் புன்முறுவலுடன் காட்டுகின்றது .. 
பால் போன்ற வெண்ணீறு காற்றில் நறுமணம் பரப்புகிறது .. 
செஞ்சடை எட்டுத் திசைகளிலும் விரிந்தாடுகிறது .. வலக்கால் அசுரனை மிதித்து நிற்கிறது .. 
இடக்கால் குஞ்சிதபாதமாக (தொங்கியநிலையில்) நமக்கு அருள்செய்கிறது .. 
நம் இதயம் என்னும் கோவிலில் இறைவன் இடைவிடாமல் திருநடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார் .. இதனைக்கண்டு தரிசித்தால் வாழ்வில் எப்போதும் நமக்கு ஆனந்தமே !
திருவாதிரை நன்னாளில் அவனே ! அவனே ! என்று கூறாமல் .. சிவனே ! சிவனே ! என்று வாழ்த்தி வணங்கி எல்லா நலங்களையும் பெறுவோமாக .. 
“ ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

No comments:

Post a Comment