SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM....POOJA AT SIVA SWAMI RESIDENCE 24-6-2017









சிந்தை எல்லாம் நிறைந்து சீர்செய்தவன்
சிவாவின் இல்லத்தில் கால் பதித்தவன்
முந்தை வினையகற்றி முக்தி தரும் சீலன்
மந்தைகளாய் இருந்தோம் இறை அறிவின்றி
வந்தெமை அடியவராய் ஆட்கொண்டாய் 
பிந்தை வரும் பிறப்பிலும் நான் உன் அடியவனாய்
சந்தமெடுத்துப் பல பாக்கள் பாடவேண்டும் 
விந்தையிலும் விந்தை உன் லீலைகள்
உன் கண்ணசைவில் என் மனம் களி நடனம் புரிய
உன் புன்னகையில் அகிலமே அன்பால் நிறையும்
உன் கால் ஜதியில் எம் நாடி துடிக்க
உன் அன்பில் இந்த உலகம் தளிர்க்க
நீ அசைந்தால் இந்த உலமே அசையுமன்றோ
பார் போற்றும் பாலகன்  சற்குருநாதன்
சபரியில்  கால் வைத்தால் துன்பம் தீரும்



No comments:

Post a Comment