SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE SOMVAR VIRADAM TOO .. MAY LORD SHIVA'S DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS IN YOUR CAREER & MAY ALL YOUR PRAYERS BE ANSWERED TOO .. " OM NAMASHIVAAYA




” அன்பினைத் தந்து அகந்தையை அழிக்கும் 
அறிவினைத் தந்து அழிவினைத் தடுக்கும் 
வல்லமைத் தந்து வல்வினை அகற்றும் 
நன்மைகள் தந்து நலிவினைத் தடுக்கும் 
ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய ”
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் அனுஷ்டிப்பதால் சிவாலயம் சென்று ஈசனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தீமைகள் அகன்று .. நன்மை பயக்கவும் .. தாங்கள் இன்று தொடங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியையும் .. மகிழ்ச்சியையும் தந்தருள்வாராக ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !!
திங்கட்கிழமையை சோமவாரம் என்றழைப்பார்கள்
சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு .. திங்கள் என்றால் சந்திரன் .. சிவனாரின் தலையில் சந்திரனையும் .. கங்கையையும் சூடியிருப்பார் .. எனவே திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வர மனோபலத்தையும் .. தெளிவையும் பெறலாம் என்கிறார்காள் ஆச்சார்யார்கள் ..
சந்திரன் தட்சனின் சாபத்தால் கொடிய நோயினால் துன்பப்பட்டான் .. நோய் குணமாகவேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவர் அருளால் நவக்கிரகங்களில் ஒருவன் ஆனான் .. அவன் பெயரால் சோமவாரம் (திங்கட்கிழமை) தோன்றியது ..
இந்த விரதத்தினை திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் கடைபிடித்து சாம்ப பரமேஸ்வர பூஜையை செய்தால் பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும் வெகுதூரத்தில் உள்ளவர்கள் தங்கள் இருப்பிடத்தை நாடிவந்துசேர்வர் .. வாழ்வில் இழந்த அனைத்தையும் பெறுவீர்கள் என்பது உறுதி ..
சிவனைப் போற்றுவோம் ! சிவயோகம் பெறுவோம்! 
“ ஓம் நமசிவாய ! ஹர ஹர மஹாதேவா ” 
 வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, indoor

No comments:

Post a Comment