இளஞ்சூரியன்போல் நம் உள்ளத்தில் ஒளிகொண்டவனே ! பாவங்களைக் களைந்து எமை காத்தருள்பவனே ! தேவர்களுக்கெல்லாம் தேவனே!
கருணைமிக்கவனே ! அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தைத் தருபவனே ! எல்லையில்லாத பரம்பொருளே ! உன் திருவடிகளை சரணடைந்து நின் அருளை வேண்டுகிறோம் சதுர்த்தி நாதனே “
கருணைமிக்கவனே ! அளப்பரிய சக்தியால் அளவற்ற செல்வத்தைத் தருபவனே ! எல்லையில்லாத பரம்பொருளே ! உன் திருவடிகளை சரணடைந்து நின் அருளை வேண்டுகிறோம் சதுர்த்தி நாதனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலைவந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையும் .. வளர்பிறை சதுர்த்தித் திதியுமாகிய இன்று வேதங்களாலும் அறியமுடியாதவரும் .. வேதத்தின் முடிவாகத் திகழ்பவருமாகிய விக்ன விநாயகரைப் போற்றித் துதித்து எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிகிட்டவும் .. தங்களனைவருக்கும் நிம்மதியும் .. செல்வச்செழிப்பும் மேலோங்கவும் .. கணபதியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
விநாயகர் பிரணவத்தின் வடிவம் .. இதன் திரிந்தவடிவமே பிள்ளையார் சுழி .. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும் .. சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும் .. சுக்லபட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை “வரசதுர்த்தி” என்று அழைப்பார்கள் ..
சதுர்த்தி திதியில் விநாயகர் முன் அமர்ந்து சொல்லவேண்டிய பிரார்த்தனை இது ..இதனைச் சொல்வதால் உயர்ந்த புகழ் ஏற்படும் .. எதையும் சாதிக்கும் ஆற்றல் கிடைக்கும் ..
மகிழ்ச்சிபொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே ! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவா வரம் தர காத்திருக்கும் குணநிதியே ! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே ! உலகத்தை விளையாட்டாகச் செய்பவனே ! ஒப்பில்லாத உயர்ந்த தயாளகுணம் உள்ளவனே !
கஜாமுகாசுரனை வென்றவனே ! தீயதை அழித்து நல்லதைச் செய்து எம்மை காக்கும் விநாயகனே ! உனக்கு எங்கள் வணக்கங்கள் ..
கஜாமுகாசுரனை வென்றவனே ! தீயதை அழித்து நல்லதைச் செய்து எம்மை காக்கும் விநாயகனே ! உனக்கு எங்கள் வணக்கங்கள் ..
உலகமக்களுக்கு நலமும் .. மங்களமும் தருபவனே!
நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனநிறைவைத்தருபவனே ! நாங்கள் செய்யும் குற்றங்களைக்கூட குணமாகக் கொள்பவனே ! உனக்கு எங்கள் நமஸ்காரம் ! திரிபுரம் என்னும் அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்த சிவபெருமானின் மூத்த புத்திரனே ! எங்கள் துன்பத்தை தீர்த்து வை ..தூய்மையான மனதைக் கொடு .. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களி ஓடோடி வந்து காக்க வருபவனே ! உண்மை வெற்றி பெற துணை நிற்பாயாக !!

காலமெல்லாம் உன்னையே நினைந்து வணங்கும் பக்தர்களை என்றும் காத்தருள்வாயாக !
” ஓம் விக்னேஷ்வராய நமஹ ” ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
” ஓம் விக்னேஷ்வராய நமஹ ” ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment