SWAMY SARANAM...GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD SURYA MAY YOUR SUNDAY BE THE BEST FILLED WITH LOVE & HAPPINESS TOO .. " JAI SHREE SURYA DEV "



” முடிபுனைந்து அரும்பொற்பைம்பூண் முயங்க மெய்முழுவதும் பூண்டு வடியிசை மறை புகன்று மாதவர் அங்கி ஓம்பக் கொடி அணி நெடுந்தேர் ஏறிக் குலம்படு கமல மங்கை கடிமணம் செய்யத் தோன்றும் கதிரவன் திருத்தாள் போற்றி ! போற்றி !
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
ஏழு உலகங்களுக்கும் ஒளிதரும் விளக்காகிய சூரியபகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று .. துன்பம் நீங்கி .. ஆயுள் .. நல்லாரோக்கியம் மற்றும் செல்வம் முதலிய அனைத்து நலன்களையும் தங்களனைவருக்கும் தந்தருளுமாறு ஆதவனைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!

உலகையே பரந்தருளும் அற்புத இயற்கை சக்தி சூரியன்.. புராணத்தைப் பொறுத்தவரை பராக்கிரம திறமைசாலியான அனுமனுக்கே குருவாக அமைந்து நவவியாகரணங்களை கற்பித்தவர் சூரியன் .. ராவணனுக்கெதிரான போரில் மனத்தளவிலும் .. உடல் ஆரோக்கியத்திலும் தளர்ச்சியடைந்திருந்த ராமனை சூரியனைப் போற்றும் ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள் தான் புத்துணர்வு ஊட்டி புதுபலம் கொடுத்து முழுவேகத்துடன் ராவணனை எதிர்கொண்டு வெற்றியும் பெறச் செய்தது ..
சூரியன் ஒளிகொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டால் கண்நோய்கள் குணமாகும் .. எனவே பகை .. அச்சம் விலக பகலவனை வணங்குவோமாக !
“ ஓம் சூர்யாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 


No comments:

Post a Comment