SWAMY SARANAM...GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. THIS WAS THE DAY WHEN GODDESS GANGA DESCENDED TO EARTH FOR THE FIRST TIME .. HER ENERGIES CAN BE USED TO CLEANSE TEN DIFFERENT SINS HENCE THIS OCCASION IS CALLED AS " DASAPAAPAHARA DASAMI " .. MAY GODDESS GANGA & LORD SHIVA BLESS YOU ALL FOR A HAPPY & A PROSPEROUS LIFE TOO .. " OM NAMASHIVAAYA "


” பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின் 
முற்றது எல்லா முதல்வன் அருள் பெறில் 
கிற்ற விரகிற் கிளரொளி வானவர் 
கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே ”
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வைகாசி மாத வளர்பிறை தசமித்திதியாகிய இன்று
” பாபஹர தசமித் திதி “ அனுஷ்டிக்கப்படுகின்றது .. புண்ணிய நாளான இன்று புனித நீர்நிலைகளில் நீராடி பத்துவித பாவங்களிலிருந்தும் விடுபடலாம் என்று ஸ்ரீஸ்காந்தம் கூறுகிறது .. தங்களனைவரது பாபங்கள் யாவும் களையப்பெற்று சுபீட்சமான வாழ்வுதனைப் பெற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
வசந்தம் தரும் வைகாசி மாதத்தை மாதவ மாதம் .. வைசாகம் என்றும் அழைப்பதுண்டு .. வைகாசி என்னும் சொல்லில் காசி என்னும் சொல்லும் இருப்பதால் இம்மாதத்தில் காசியில் கால் வைப்பது போற்றப்படுகிறது .. ஏனெனில் பகீரதன் செய்த கடுந்தவத்தின் பயனாக வைகாசி மாத சுக்லபக்ஷ தசமித் திதியில் கங்காதேவி தேவலோகத்திலிருந்து பூலோகத்திற்கு இறங்கி வந்தாள் என்று புராணம் கூறுகிறது .. இந்நாளில் கங்கையை நினைத்து நீராடினால் சகலபாபங்களும் நீங்கப்பெறும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன ..
இந்நாளில்தான் அஸ்த நட்சத்திரமும் சேர்ந்துவரும் தசஹர புண்ணிய காலமும் ஒன்று .. ஸ்ரீராமபிரான் இலங்கை வேந்தன் ராவணனை சம்ஹாரித்த பாபம் நீங்க மணலில் லிங்கப்பிரதிஷ்டை செய்து சேதுக்கரையில் வழிபட்டார் ர்ன்பது ஐதீகம் ..
பாபஹர தசமி நன்னாளில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் நம் மனம் .. வாக்கு .. சரீரம் இவை மூன்றால் செய்யப்பட்ட அனைத்து பாவங்களும் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன .. புண்ணிய நாளான இன்று ராமேஸ்வரத்தில் நீராடி ராமநாத சுவாமியை தரிசித்தால் பத்துவிதமான பாவங்களில் இருந்து விடுபடலாம் என ஸ்ரீஸ்காந்தம் கூறுகிறது ..
பத்து பாபங்கள் - 
1 - வாக்கினால் செய்வது நான்கு 
2 - சரீரத்தால் செய்வது 3 
3 - மனதால் இழைப்பது 3 
ஆக இந்தப் பத்துப் பாபங்களையும் போக்கிக்கொள்ள இந்த பாபஹர தசமி உதவுகிறது ..
1 - வாக்கினால் செய்வது நான்கு -
கடுஞ்சொல் .. உண்மையில்லாத பேச்சு .. அவதூறாக பேசுவது .. அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாகப் பேசுவது ..
2 - சரீரத்தால் செய்வது 3 - 
நமக்குக் கொடுக்கப்படாத பொருள்களை நாம் எடுத்துக்கொள்வது ..
அநியாயமாக பிறரைத் துன்புறுத்துவது .. 
பிறர் மனைவிமீது ஆசைப்படுவது ..
3 - மனதால் இழைக்கப்டும் பாபங்கள் 3 -
மற்றவர்கள் பொருளை அடைய திட்டமிடுவது .. 
மனதில் கெட்ட எண்ணங்கள் நினைத்தல் 
மனிதர்களிடம் பொய்யான ஆசை கொள்ளுதல் .. 
இவை அனைத்தும் நீங்க சிவபெருமானையும் திருமாலையும் .. கங்காதேவியையும் நினைத்து இனிமேல் பாபங்கள் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி வீட்டில் குளித்தாலும் பாவத்திலிருந்து விடுபட்டு நிம்மதி பெறலாம் .. அனைவரது ஆசிகளுடனும் புண்ணியமானதொரு வாழ்வினைத் தொடங்குவோமாக ..
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
Image may contain: 6 people

No comments:

Post a Comment