SWAMY SARANAM....GURUVE SARANAM...PANVEL BALAGANE POTRI POTRI// GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE PRADOSHAM TOO .. MAY LORD SHIVA REMOVE ALL THE NEGATIVITY & KARMIC IMBALANCES FROM YOUR LIFE & FULFILL ALL YOUR WISHES .. " OM NAMASHIVAAYA " ..



” நாகத்தான் கயிறாகக் நளிர்வரையதற்கு மத்தாகப் 
பாகத்தேவ ரொடகடர்படுகடலனின் யெழக்கடைய 
வேக நஞ்செழவாங்கே வெருவோடு மிரிந்தெங்கு மோட ஆகந்தண்ணில் வைத்தமிர்தமர்க்குவித்தான
மறைக்காடே “ (திருஞானசம்பந்தர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க் கிழமையாகிய இன்று சிவமூர்த்திக்கு உகந்த விரதங்களுள் தலையாய ஒன்றான பிரதோஷ விரதமும் கூடிவருவது சிறப்பாகும் .. ரணமும் .. ருணமும் .. செவ்வாயால் வரும் கெடுபலன்கள் யாவும் தங்கள் வாழ்விலிருந்து நீங்கி .. சுபீட்சம் பெற்றிடவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம் .. ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்தபயனை அளிக்கும் .. 
ஆலயவழிபாடு - உடல்நலத்தையும் ..
திருமுறைகளை ஓதுவது - வாக்கு நலத்தையும் ..
மந்திரங்களை ஓதுவது - மன நலத்தையும் தந்து நம்மைக்காக்கும் ..
பிரதோஷம் என்றால் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது .. இந்தப்பிரதோஷ நேரத்தில்தான் தேவர்களும் .. அசுரர்களும் போட்டிபோட்டுக்கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது .. திருமகள் .. ஐராவதம் .. காமதேனு .. கற்பகத்தரு .. சிந்தாமணி கௌச்லஸ்துபமணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின ..
லக்ஷ்மியை திருமால் ஏற்றுக்கொண்டார் .. மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக்கொண்டனர் .. ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது .. இதைக்கண்டு தேவர்களும் .. முனிவர்களும் பெரிதும் நடுங்கினர் .. இறைவன் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான அமரர்கள் உய்ய அமுதம் போல் உண்டருளினார் .. அந்த விஷம் உள்ளே சென்றால் உள்முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்துவிடும் .. 
உமிழ்ந்தால் வெளிமுகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்துவிடும் ஆதலால் உண்ணாமலும் .. உமிழாமலும் இருக்க கருணையே வடிவான அனைத்து உயிர்களுக்கும் அன்னையாக இருக்கும் பார்வதிதேவி இறைவன் கண்டத்தில் கைவைத்து மேலேயும் வராமல் .. கீழேயும் போகவிடாமல் தடுத்தாட்கொண்டாள் .. அதனால் இறைவனுடைய கழுத்தானது நீலநிறமாகமாறி ” நீலகண்டன் “ என்ற பெயர் பெற்றார் ..
எல்லா உயிர்களையும் காப்பாற்றவேண்டி இந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானுடைய கருணைக்கு வேறு ஈடில்லை .. 
பரமகருணாநிதியான சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டு கயிலையில் அன்று மாலை 
(4.30 மணிமுதல் 6.00 வரை) பிரதோஷவேளையில் தம் திருமுன் இருந்த ரிஷபதேவரின் இருகொம்புகளுக்கு இடையில் நின்று அம்பிகை காணத் திருநடனம் செய்தருளினார் ..
தேவர்கள் அதனைத் தரிசித்து சிவபெருமானைத் துதிசெய்து வணங்கினார்கள் .. அன்றுமுதல் திரயோதசி திதியன்று மாலைநேரம் பிரதோஷகாலம் என்று வழங்களாயிற்று .. இந்நேரம் சிவபெருமானையும் நந்தீஸ்வரரையும் போற்றித்துதித்து துன்பங்களிலிருந்து விடுபடுவோமாக ..
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .

..Image may contain: 1 person
.

No comments:

Post a Comment