PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM....GURUVE SARANAM SARANAM./.GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE " VAIKASI VISAAKAM " (BIRTHDAY OFLORD MURUGA ) MAY THE DIVINE PERSONIFICATION OF SUPREME CONSCIOUSNESS .. INTELLIGENCE & WISDOM CAN DISPEL BAD KARMA & REMOVE DARKNESS FROM YOUR LIFE .. HE CAN ENDOW YOU WITH CLARITY OF THOUGHT .. COURAGE .. STRENGTH & SELF-CONFIDENCE .. REACH OUT TO LORD MURUGA ON HIS BIRTHDAY & OBTAIN HIS DIVINE BLESSINGS FOR A PROSPEROUS & BLESSED LIFE .. " OM SARAVANABAVAAYA NAMAHA "



” நெற்றிக்கண்னொன்றில் கனலாய் வந்தாய் ! 
ஆறுகமலத்தில் உருவாய் நின்றாய் 
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் 
கருவாய் உயிராய் கதியாய் விதியாய் 
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் “ வைகாசி விசாகத் திருநாள் “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாகிய இன்று தங்களனைவருக்கும் இதுவரை வாழ்வில் ஏற்பட்டிருந்த தடை .. தடங்கல்கள் எதிர்ப்புகள் யாவும் தவிடுபொடியாகி .. கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கி .. வாழ்வில் உச்சத்தைத் தொடவும் எல்லாம் வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோசுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாளே முருகப்பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது .. இதனை வேனில் விழா என்றும் கூறுவர் .. விசாகம் ஆறுநட்சத்திரங்கள் ஒருங்குகூடிய தொன்று .. இதனால் முருகனும் ஆறுமுகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம் ..
ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலால் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகிறது .. எனவே உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு எம்பிரானே தன் திருவிளையாடலாற்ற குழந்தையான நாளாதலால் சைவவழிபாட்டிற்கு இந்நாள் மிகவும் சிறந்ததாகும் ..
தீமைகளை அழித்து நன்மைகளை காப்பதற்காகவே ஏற்பட்டது முருகனின் தோற்றம் .. விசாகம் ஞானத்திற்குரிய நக்ஷ்த்திரமாகும் ..
வி என்றால் - பட்சி (மயில்)
சாகன் என்றால் - சஞ்சரிப்பவன் ..
மயில்மீது வலம்வரும் இறைவன் என்பதால் “விசாகன்” என்றும் வழங்குவர் ..
புராணவரலாறு -
முன்னொரு காலத்தில் பத்மாசுரன் என்ற அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும்தவம் இருந்தான் .. மனமகிழ்ந்த சிவனும் அர்க்கன்முன் தோன்றியதும் பத்மாசுரன் சிவனுக்கு இணையான ஒருவரைத்தவிர வேறு யாராலும் தன்னை அழிக்கமுடியாத வரமொன்றினைப் பெற்றான் ..
வரத்தின் பலத்தால் யாரும் தன்னை வெல்லமுடியாது என்ற ஆணவத்தால் தேவர்களுக்கு பல கொடுமைகள் செய்வித்தான் .. அவனால் துன்பப்பட்ட தேவர்கள் சிவனிடம் முறையிட சென்றவேளை சிவனும் தவத்தில் இருந்ததால் இதனைப் பயன்படுத்திக்கொண்ட தேவர்கள் தங்களை துன்புறுத்தும் அரக்கனை அழிக்க் தங்கள் அம்சமாக ஒருவரை உருவாக்க வேண்டும் என்று வேண்டிட சிவபெருமானும் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறுபொறிகளை உருவாக்கி கங்கைநதியில் விட்டார் .. வைகாசி மாதத்து விசாக நட்சத்திரத்தில் அனைவரின் உயர்விற்காக வந்திங்கு உதித்தார் !
” அருவமும் உருவமாகி ! அநாதியாய்ப் பலவாயொன்றாய்ப் பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர் மேனியாகக் கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங்கொண்டே ஒருதின முருகன் வந்தாங்குதித்தான் உலகமுய்ய”
விசாகனாம் முருகனைப் பணிந்து வினைகளைப் போக்குவோம் ! 
“ ஓம் சண்முகா சரணம் ! சரவணபவ ஓம் “
Image may contain: 1 person

No comments:

Post a Comment