SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF SHIRDI SAI MAY THE BLESSINGS OF SHIRDI SAI FILL YOUR LIFE WITH HAPPINESS & PROSPERITY .. " OM SAI RAM "



 சின்னஞ் சிறிய சிங்கார பாதம் ! 
நளின நடை பயில வந்திடும் பாதம் 
ஷிர்டியிலே விளையாடிய பாதம் 
பரமகுரு ஷீரடிசாயீசன் பாதம் ! 
அடிமேல் அடிவைத்து அசைந்து வரும் பாதம் 
வருடித் தொழுமுன் வந்து நின்றிடும் பாதம் 
அன்புடனே ஒருகணம் நினைத்தாலே எங்கிருந்தாலும் 
ஓடோடி வரும்பாதம் “ 
ஓம் சாய் ராம் ! ஓம் சாய் ராம் ! ஓம் சாய் ராம் !
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
குருவருளும் . இறையருளும் கூடிய இந்நாளில் நம் அனைவராலும் போற்றித் துதிக்கப்படும் குருநாதராகிய 
ஷீரடி பாபாவைத் துதித்து தங்களனைவருக்கும் இந்நாள் ஓர் இனிய பொன்னாளாக மிளிரவும் மனதில் அமைதியும் .. நல்லாரோக்கியம் பெற்றிடவும் பாபாவைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஷீரடி வாஸாய வித்மஹே ! 
சச்சிதானந்தாய தீமஹி ! 
தந்நோ சாய் ப்ரசோதயாத் !!
ஷீர்டி சாய் இந்த கலியுகத்தில் அவதரித்த மகான்களில் 
முதன்மையானவர் .. அன்று பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றிய மகான் .. இன்றும் சமாதி நிலையில் இருந்துகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ..
மகான்களுக்கு ஜாதி மத இன வேறுபாடு கிடையாது .. ஷீர்டி சாய் ஓர் உயர்ந்த உன்னதமான பரிசுத்தமான அவதாரம் .. தயை சாந்தி .. தர்மம் .. இதுவே அவரது தாரகமந்திரமாகும் ..
மனித பிறவிகள் தவறு செய்வது இயற்கையே ! மாயையின் விளையாட்டில் தம் பக்தர்கள் தவறு செய்வார்கள் என்பது பாபாவிற்கும் தெரியும் .. எனவே பாபா எப்போதும் விழிப்பாய் இருந்து அவர்கள் தவறுசெய்வதைத் தவிர்க்க யார்மூலமாவது தடுத்தாற்கொள்ளவே பார்ப்பார் ..
பக்தன் தானே செய்யும் தவறுகளின் காரணமாய் ஆபத்தில் சிக்கிக்கொண்டால் பாபா நேரிடையாகவோ .. மறைமுகமாகவோ பக்தனைக் காப்பாற்றிவிடுவார் ..
“ நீங்கள் எங்கேயிருந்தாலும் ! என்ன செய்தாலும் அதனை முழுமையாக நான் அறிவேன் “ என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள் ! என்று பாபா சகலதும் அறிந்தவராக இருந்தார் என்பதை ஸ்ரீசாயி சத்சரித்திரம் கூறுகிறது ..
சிலசமயம் நாம் பாபா காட்டிய வழியைப் பின்பற்ற முடியாமற்போகலாம் .. அதற்காக அவர் வருத்தப்படுவதில்லை .. அவர் விருப்பு .. வெறுப்பு மற்றும் சினம் ஆகிய குணங்களுக்கு அப்பாற்பட்டவர் .. 
கருணையே உருவானவர் .. குருபாதையில் முன்னேற பக்தனுக்கு உள்ள உண்மையான நோக்கத்தை அவர் கண்காணிக்கிறார் .. மன உறுதியுடன் திடமாக இருந்து பாபாவிடம் முழுமையாக சரணாகதியடைந்தால் அவனுடைய தவறுகளையும் பொருட்படுத்தாது பாபா தன் பக்தனை ஏற்றுக்கொள்வார் ..
சதாகாலமும் சாயீ ! சாயீ ! என்று உச்சரித்து அவரது திருவடிகளைப் பரிபூரணமாகப் பற்றிடுங்கள் .. நீங்கள் விரும்பிய அனைத்தும் நிறைவேறும் .. 
“ ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 

Image may contain: 1 person


No comments:

Post a Comment