PANVEL BALAGAN PATHAM POTRI....SWAMIYE SARANAM IYYAPPA...







பெருகும் கருணை உனது 
உருகும் மனது எனது
கலங்கும் மனது எனது 
துலங்கும் அருள் உனது
குறைகள் கொண்ட மனது
தேடும் உனது பாதம்
மறைகள் ஓதும் பொருளே
கறைகள் இல்லா நிலவே
சுகந்தம் வீசும் மலரே
சுகங்கள் தவிர்த்த நீயே
பயங்கள் போக்கி எம்மை
புயத்தில் தூக்கி வைத்தாய்
பாத கமலம் சரணம்
ஈர விழிகள் சலனம் 
தூர பாதை தன்னினில் வரும்
துணையும் நீயே குருவே
அன்பின் சுரங்கம் ஆனாய்
அன்பால் எமையே காத்தாய்
பண்பின் இருப்பிடம் நீயே
கண்கள் மூடிப் பணிந்தோம்
சுவாமியே சரணம் சரணம்
                                                    குருவே சரணம் சரணம்

No comments:

Post a Comment