SWAMY SARANAM...GURUVE SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY & A DIVINE THIRUVONAM STAR .. MAY BHAGAVAN VISHNU DEV SHOWER YOU & GUIDE YOU THROUGH THE WHOLE LIFE & GRACIOUSLY GRANTS ABUNDANT WEALTH WITH BEST HEALTH & PROSPERITY .. " OM NAMO NAARAAYANAAYA "


” ஆளவந்தாயோ ! அடியார் மனராஜ்யம் தொட்டு ஆளவந்தாயோ அடியார் படுதுயரம் தூளாகும் 
பூரணச் சந்திரவதனா ! வரதா ! வைகுண்டநாதா ! ஸ்ரீனிவாஸா ! நின்பாதம் சரணடைந்தோம் காத்தருள்வாயாக “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
புதன்கிழமையாகிய இன்று திருமாலுக்கு உகந்த திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரவண விரதமும் கூடிவருவது சிறப்பாகும் .. இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. வேண்டிய வரங்கள் யாவும் வேண்டியபடியே தங்களனைவரும் பெற்றிடவும் .. கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கி மேன்மையுறவும் .. ஒப்பிலியப்பனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய் தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
திருவோண நட்சத்திரத்தில் பகவானின் பக்தர்கள் ஸ்ரவண விரதத்தை அனுஷ்டிப்பார்கள் .. இன்றைய நாளில் பகவானுக்கு படைக்கும் அனைத்து நைவேத்தியங்களிலும் உப்பு சேர்க்கப்படமாட்டாது .. பூமிநாச்சியார் பகவானுக்கு சமைக்கும்போது உப்புபோட மறந்துவிட்டமையே காரணமாகும் ..
மார்க்கண்டேய மகரிஷி பூமிதேவித் தாயாரை மகளாக அடையும் பாக்கியம் பெற்றவர் .. உப்பை தியாகம் பண்ணி தன் பெண்ணை மணக்கச் சித்தமான வயோதிகரை புறக்கண்ணை மூடி அகக்கண்ணை திறந்து பார்த்தால்தானே தெரிகிறது வந்து நிற்பவர் ஓங்கி உலகளந்த உத்தமன் பொன்னப்பன் ! மணியப்பன்! முத்தப்பன் ! என்னப்பன் ! தன் ஒப்பார் இல் அப்பன் அல்லவா இவன் என்று ! மனமகிழ்ந்து தன்பெண்ணை பூமிதேவிப் பிராட்டியை கன்னிகாதானம் செய்வித்துக் கொடுக்கிறார் மார்கண்டேய மகரிஷி !
“ மீனாய் ! ஆமையாய் ! பன்றியாய் ! அரி உருவாய் ! ஆனாய் உயர்ந்த வாமனனாய் கோவ ராமனாய் ! ரகுராமனாய் ! அண்ணனாய் ! கள்ளகண்ணனாய் ! வெண்பரி மன்னனாய் காண்பது வண்புகழ் நாராணனே “
பகவானைப் போற்றுவோம் ! அவரது திருப்பாதங்களில் சரணடைவோமாக ! ஓம் நமோ நாராயணாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

No comments:

Post a Comment