SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE SHASHTI THITHI TOO .. MAY LORD MURUGA RELIEVE YOU FROM ALL THE EVIL & NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH HAPPINESS & FULFILL ALL YOUR DESIRES TOO .. " OM SARAVANABAVAAYA NAMAHA "


” மாமரமாய் நின்ற சூரனை இருகூறாகப் பிளந்த வெற்றி வீரனே ! கற்றவர்கள் புகழ்ந்து போற்றும் ஞான பண்டிதனே ! செவ்வானம் போல் சிவந்த மேனியனே !
கடம்பம் முல்லை மலர்களை விரும்பி அணிபவனே !
அறிவுக் கண்களைத் திறந்து ஞானத்தைத் தந்தருள்வாயாக “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நாளில் கந்தபெருமானுக்கு உகந்த சஷ்டித் திதியும் சேர்ந்து வருவது சிறப்பு .. முருகனைத் துதித்து தங்கள் செயல்பாடுகள் அனைத்தும் வெற்றி பெறவும் .. கடன் தொல்லைகளிலிருந்து விடுதலையடைந்து சேமிப்புகள் உயரவும் .. செய்யும் தொழிலில் மேன்மை பெற்று உய்யவும் முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஒம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாஸேநாய தீமஹி ! 
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்!!
பௌர்ணமியை அடுத்து வரும் சஷ்டியை கிருஷ்ணபக்ஷ் சஷ்டி என்றும் .. அல்லது தேய்பிறை சஷ்டி என்றும் .. 
அமாவாசையை அடுத்து வரும் சஷ்டியை சுக்லபக்ஷ் சஷ்டி அல்லது வளர்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது ..
சஷ்டி முருகனுக்குரிய சிறப்பு நாளாகும் .. ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியே மிகவும் சிறப்பு வாய்ந்த “ கந்தசஷ்டி “ ஆகும் .. இந்த சஷ்டி விழாவானது முருகக்கடவுள் சூரனை சம்ஹாரம் செய்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும் ..
மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம் .. குரோதம் .. ஈயாமை (உலோபம்) மயக்கம் .. செருக்கு .. பொறாமை ஆகிய அசுரபண்புகளை அழித்து அவர்களை தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள்பாலிக்கும் இறைவனின் ஆற்றலின் பெருமையை கந்தசஷ்டி உணர்த்தும் ஓர் மெய்ப்பொருளாகும் ..
கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும் .. 
கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும் ..
மாயாமலத்தின் வடிவமாகிய தாரகனையும் .. 
அசுரசக்திகளையெல்லாம் கலியுகவரதனான கந்தப்பெருமான் அழித்து நீங்காத சக்தியை நிலைநாட்டிய உன்னத நாளே கந்தசஷ்டியாகும் ..
கந்தர் அனுபூதி .. திருப்புகழ் .. கச்சியப்ப சுவாமிகளின் கந்தபுராணம் ஆகியவற்றைப் படிப்பதாலும் .. கேட்பதாலும் என்னவென்று சொல்லமுடியாத மன அமைதியைப் பெறலாம் ..
சஷ்டிப்பிரியனான முருகனை சஷ்டித் திதியாகிய இன்று போற்றுவோம் ! மனதளவில் உள்ள குழப்பங்களுக்கும் விடுதலை காண்போமாக ! 
“ சஷ்டிப் பிரியாய நமஹ ! ஓம் சரவணபவாய நமஹ” 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person



No comments:

Post a Comment