SWAMY SARANAM GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA LAKSHMI .. MAY SHE ILLUMINATE YOUR LIFE WITH GOOD LUCK .. GOOD HEALTH .. WEALTH & HAPPINESS TOO .. " JAI MATA DI "




” கண்ணன் மார்பில் வாழும் கமலை நீ ! அன்னை நீயே ! 
கண்ணனின் சாயல் பெற்ற காரிகை நீயே தாயே ! 
எண்ணரும் இந்தின்ஜோதி ஏற்றனை கமலச்செல்வி எண்ணியே துதிப்போம் உன்னை இன்பமே சேர்க்க அன்னாய் ! எத்தனை செல்வம் உண்டோ அத்தனை தரவும் வல்லாய் ! பித்தனை மயக்கும் செல்வி ! பேணினோம் போற்றி ! போற்றி !
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
உலகெங்கும் நாம் காணும் அனைத்திலும் வியாபித்து விளங்கும் சர்வமங்களங்களுக்கும் காரணியாகிய அன்னை மஹாலக்ஷ்மியை வெள்ளிக்கிழமையாகிய இன்று போற்றித் துதித்து தங்களனைவருக்கும் நிறைந்த செல்வமும் .. சுபீட்சமிக்க நல்வாழ்வும் .. மனதில் என்றும் அமைதியும் நிலவிட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !!
பாற்கடலில் பிறந்த திருமகளை அஷ்டலக்ஷ்மியாக வழிபடுவார்கள் .. தனலக்ஷ்மியாக .. தான்யலக்ஷ்மியாக .. தைரியலக்ஷ்மியாக .. வீரலக்ஷ்மியாக .. சந்தான லக்ஷ்மியாக .. விஜயலக்ஷ்மியாக .. வித்யாலக்ஷ்மியாக .. கஜலக்ஷ்மியாக இந்த எட்டு நிலைகளிலும் இருந்து அருளும் திருமகளை வழிபடுவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் சித்திக்கும் ..
தாமரையில் விரும்பி உறைவதாலும் .. தாமரையாள் பத்மா .. பத்மவாசினி .. பத்மினி .. நளினி .. நளினாசனி .. 
கமலவல்லி .. கமலினி .. கமலா .. நாண்மலராள் என்று பல்வேறு பெயர்கள் திருமகளுக்கு உண்டு .. எனவே திருமகளை தாமரைப் பூ சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு அதேபோல் தாமரை பூத்துக்குலுங்கும் திருக்குளங்களில் வசிக்கும் மீன்களுக்கு உணவிடுவதாலும் .. லக்ஷ்மி கடாக்ஷ்ம் உண்டாகும் ..
லக்ஷ்மி என்றால் அழகு .. கருணை .. இரக்கம் .. செல்வம் என்று பொருள் .. வெறும் அச்சடித்த காகிதங்களையும் .. சில்லறை நாணயங்களையும் தருபவள் அல்ல .. அன்பை .. அழகை .. கருணையை இரக்க குணத்தை தருபவள் ..
லக்ஷ்மிகடாக்ஷ்ம் என்னும் சொல் ஏதோ செல்வச்செழிப்பை மட்டும் குறிப்பது அல்ல .. அது ஒரு மிகப்பெரிய பதம் .. சகல சௌபாக்கியங்களையும் குறிப்பது வெற்றி .. வித்தை .. ஆயுள் .. சந்தானம் .. தனம் .. தான்யம் .. ஆரோக்கியம் இப்படி அனைத்திலும் ஒருங்கே அமைவதுதான் “ லக்ஷ்மிகடாக்ஷ்மாகும் ..
அன்னையைப் போற்றுவோம் ! நம் உள்ளத்திலும் .. இல்லத்திலும் என்றும் நீக்கமறு நிறைந்திருப்பாளாக 
“ ஓம் சக்தி ஓம் ! மஹாலக்ஷ்மியே நமோஸ்துதே “
Image may contain: 1 person, indoor


No comments:

Post a Comment