உனை நினைக்கையில் கவியூற்றாய் நான்
உனை அழைக்கையிலே மழலையாய் நான்
உனை அழைக்கையிலே மழலையாய் நான்
குருவின் பூஜையில் நாளுக்கொரு தோற்றம்
குருவின் அலங்கரிப்பிலே ஆவலை தூண்டும் என் மாற்றம்
அனுகிரஹ பூஜையில் அலுங்காமல் நின் காட்சி
அனுதினமும் எனை கொண்டு செல்லும் மாட்சி
உனைப் பாடுகையில் அடியவனாய் நான்
உனைக் காணுகையில் சேயாய் நான்
உனைப் பாடுகையில் அடியவனாய் நான்
உனைக் காணுகையில் சேயாய் நான்
என்னைச் சோதித்த பெருமானே
எந்தன் சோதனை தீர்த்தவனே
சாதிக்க நாள் வருமோ
சற்குரு நீ அருள் சொல்லுவாய்
எந்தன் சோதனை தீர்த்தவனே
சாதிக்க நாள் வருமோ
சற்குரு நீ அருள் சொல்லுவாய்
என் இதயமே கருவறையாய்
பூஜைக்கு என் இதயமலருண்டு
நல்லொளி ஏற்றிடவே எந்தனிரு கண்கள் தானுண்டு
எந்தன் நாடித்துடிப்பதுவே குருவின் பூஜை மணியாகும்
பூஜைக்கு என் இதயமலருண்டு
நல்லொளி ஏற்றிடவே எந்தனிரு கண்கள் தானுண்டு
எந்தன் நாடித்துடிப்பதுவே குருவின் பூஜை மணியாகும்
ஏழையின் வாசல் வரூவாய் ஏழைபங்காளனே
தாழம் பூவெனவே தண்மணம் தருவாய்
ஆழம் காணமுடியா அரும்பெரும் ஜோதியே
பாதம் பணிகின்றேன் காத்தருளும் ஐயா
தாழம் பூவெனவே தண்மணம் தருவாய்
ஆழம் காணமுடியா அரும்பெரும் ஜோதியே
பாதம் பணிகின்றேன் காத்தருளும் ஐயா
அனுகிரஹம் அனுதினமும் தாருமய்யா
No comments:
Post a Comment