” குருவந்தனம் செய்வோம் ! தாய் தந்தை தோழனுமாய் உற்றதொரு வழித்துணையாய் நினைத்தும் வந்தெம்மை ஆட்கொள்ளும் குருவினை தொழுதிடுவோம்
ஓம் குருநாதா !
ஓம் குருநாதா !
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் “ குருபூர்ணிமா “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. ஒவ்வொரு வருடமும் ஆனிமாதத்தில் வரும் பௌர்ணமி குருபூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது .. இந்நாளில் சன்னியாச ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாசபூஜை செய்து வேதவியாசரை ஆராதிப்பார்கள் ..
வாழ்க்கை முழுவதும் சன்னியாசிகள் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு குருமற்றும் ஈஸ்வரனையும் வழிபட வேண்டும் .. பெற்ற ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையிலும் .. தான் துவங்கியிருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும் வியாசபகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள்
“குருபௌர்ணமி “ என்றும் அழைக்கப்படுகிறது ..
“குருபௌர்ணமி “ என்றும் அழைக்கப்படுகிறது ..
இந்நாள் துறவிகளுக்கு மட்டுமல்லாமல் ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறியமுற்படும் அனைவரும் தங்களது குருவையும் .. வியாசபகவானையும் .. ஆராதிக்கவேண்டும் .. வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசபகவான் .. ஸ்ரீகிருஷ்ணன் அருளிய கீதையைத் தொகுத்தவர் .. அவர்தான் பிரம்ம சூத்திரத்தை (வேதங்களின் சாரம்) எழுதியவர் .. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ப்ரஸ்தான த்ரயம் எனப்படும் மூன்று நூல்களிலுமே வியாசமுனிவரின் பங்குள்ளது ..
எந்தவிதமான காரணமும் இல்லாமல் எந்தவிதமான பிரதியுபகாரங்களையும் எதிர்பாராமல் வெறும் கருணையினால் மட்டுமே நமக்கு ஞானச்செல்வத்தை அள்ளித்தரும் குருநாதருக்கு எமது அகவாழ்விற்கு வழிகாட்டி .. தன்னையுணர வழிசெய்த அனைத்து குருநாதருக்கும் நன்றிக்கடன் செலுத்தக்கூடிய திருநாளே குருபூர்ணிமா !
குருபௌர்ணமியாகிய இன்று இறை ஆராதனைகளில் பங்குபற்றி .. எம்மையெல்லாம் ஆட்கொண்டு வழிநடத்தும் ஞானகுருவுக்கு நன்றி செலுத்துவதுடன் .. குருவின் கரங்களை இறுகப்பற்றிக்கொண்டு இவ்வுலகின் துன்பக்ககடலினை கடந்து செல்வோம் !
“ ஓம் நமோ பகவதே ! குருதேவாய நமோ நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
No comments:
Post a Comment