PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM GURUVE SARANAM



ஜூலை 30 , ஆடி 14 ம் நாள், இனிய ஞாயிறு காலை வணக்கங்களுடன் ஆடி மாதத்தை பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மீண்டும் நினைவு படுத்தி அம்மன் கோவில்களில் சில அம்மனின் தரிசனமும் காண்போம் வாருங்கள்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் ஜோதியான அந்த பரமசிவன் அண்டம் அனைத்தையும் உருவாக்கி அதில்  தான் படைத்த  மனிதன் மகிழ்ச்சியுடன்  வாழ, சிறு-குடில் போன்ற பூமியையும் உருவாக்கி, தன்னுடைய சக்தியான பூமா தேவியை, பூமியில் பூமித்தாய்-அம்மனாக அவதரிக்க செய்த மாதம் தான் இந்த ஆடி மாதம்.

இந்த மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. வருடத்தை இரு காலங்களாக பிரித்து,தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இது தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்கள் லிங்க வழிபாடு செய்கின்ற மாலை நேரம் ஆரம்பமாகின்றது.

ஒரு நாள் பார்வதி தன்னை வேண்டி தவம் செய்வதை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஒரு தனிச்சிறப்பு, சிவனும் சக்தியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரரை  பூசிக்கும் மாதமல்லவா இது .

சிவனும்-சக்தியும் அர்த்தநாரீஸ்வரராய் உலா வரும் போது, ஐயமின்றி  குளு குளு அருவிகளில் ஆடிப்பாடி பூத்துக்குலுங்கும் ஆடி மாதத்திற்கு இயற்கையாகவே  பல தனிச்சிறப்புகளும் உண்டு  பார்க்கும் இடமெல்லாம் பூவும் காய் கனிகளுமாய் கொட்டிக்கிடக்கும் ஆடி மாதத்தில் உணவுக்கு பஞ்சமே கிடையாது  

காடும் மேடும் பள்ளமும் வயலும் குளமும், ஏரியும், ஆறும் கடலும்  பொங்கி வழியும் இந்த மாதத்தின் வருகை விலங்குகளும், பறவைகளும் இன விருத்தி செய்து கீக்கீ கீ.... கூக்கூ கூ.. என்னும் ஒலியுடன் குட்டி-குஞ்சுகளுடன் மகிழ்சியுடன் சுற்றித்திரியும் அற்புதமான மாதமிது

ஆடிக்காற்று , ஆடிப்பெருக்கு - (நதிகளில் நீர்ப் பெருக்கு), ஆடிப்பட்டம், ஆடிப்பூரம்-(கோதை நாச்சியார்-ஆண்டாள் அவதரித்தநாள், அம்மனுக்கு வளையல் அணிவித்தல்) ஆடிக்கூள், ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பிறப்பு, ஆடிப்பூரணை-(பெளர்ணமி) ஆடி நிலாச் சோறு, ஆடி அமாவாசை  - (முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும்)

ஆடித்தாலி ( புதுத் தாலி அணிவது), ஆடி கிருத்திகை (திருத்தணி முருகன் திருவிழா), ஆடித்தேர், ஆடி முளைப்பாரி என்று ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் ஆடி மாதச் சிறப்புகளை சொல்லில் வடிக்க முடியாது.

ஆடி மாத-அம்மன் கூழின் மகிமை
ஆனந்தக்கூத்தன் அம்மன் அடியவர்களுக்கு அருட்சத்தியையும், வலிமையையும், குளிர்ச்சியையும் தரும் கஞ்சியில் சேர்க்கும் முதன்மையான பொருட்களில் முதன்மையானது கேழ்வரகு, கம்பு  போன்ற சிறு-தானியங்கள் தான் 

கூழ் காச்சும் போது  ருசிக்காக சேர்க்கப்படும் மற்றய பொருட்கள் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய்-துருவல், மல்லி-இலை, கறிவேப்பிலை, மாங்காய், சில
இடங்களில் உப்பு சேர்க்கமாட்டாங்க மற்றும்  இதில் மஞ்சள், கமகமக்கும் வேப்பிலை மிக சிறப்பு மிக்கது என்பது தான் அம்மன், வேப்பிலை நாயகியின்-கூழின் மகிமை. 

“திரிபுரசுந்தரி திருவடித் தாமரை  தினம் வந்து நமைக் காக்குமே திரிபுரசுந்தரி திருவிழிப் பார்வையில தெய்வீக நிலை பூக்குமே திரிபுரசுந்தரி திருக்கரம் படுவதால் தீமைகள் தான் விலகுமே திரிபுரசுந்தரி திருமுடி காண்கையில்
தேன் வாழ்வுதான் மலருமே”

No comments:

Post a Comment