PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE SHASHTI THITHI TOO .. MAY LORD MURUGA REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM MURUGA "---GURUVE SARANAM SARANAM...SWAMIYE SARANAM......GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE SHASHTI THITHI TOO .. MAY LORD MURUGA REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM MURUGA "

Image may contain: indoorImage may contain: flower, plant and indoor




” அருவமும் உருவவமாகி அநாதியாய் பலவாயொன்றாய்ப் பிரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம்பதோர் மேனியாக கருணைகூர் முகங்களாறும் கொண்டே ஒரு திருமுருகன் வந்தாங்குதித்தனன் உலகமுய்ய “
(இவ்வாறு முருகனின் தோற்றம் பற்றி கந்தபுராணம் கூறுகிறது)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டித் திதியாகிய (மதியம்வரை)இன்று மனதில் நிம்மதி .. சந்தோஷம் .. உற்சாகம் தங்கள் வாழ்விலும் என்றும் நிறைந்திட கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வரபுத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
முருகனுக்கு கிழமை .. நட்சத்திரம் .. திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன ..
கிழமைகளில் - செவ்வாய்
நட்சத்திரத்தில் - கிருத்திகை
திதியில் - சஷ்டி
ஆகியவை முருகனுக்கு உகந்தவையாகும் .. கந்தசஷ்டிகவசம் .. கந்தகுருகவசம் .. ஷண்முக கவசம் திருப்புகழ் .. கந்தர்கலிவெண்பா போன்றவற்றை பாராயணம் செய்து முருகனை மனதாரத் துதித்து வழிபட்டால் நமக்கு எதிராகவரும் அனைத்து தடைகள் தடங்கல்கள் .. பிரச்சினைகளையும் தகர்த்தெறிந்து வளமான வாழ்வுதனை அருள்வார் என்பது நம்பிக்கை
முருகன் கையில் உள்ள வேல் ஞானசக்தியினை குறிக்கிறது .. அனைத்து துன்பங்களும் ஞானத்தினால் விலகிடும் .. முருகப்பெருமான் பத்மாசுரனுடன் போர்புரிந்து அவனது ஆணவத்தை அடக்கி ஆட்கொண்ட நாளே சஷ்டியாகும் .. இவர்கள் இருவருக்கும் போர்நடந்த இடம் திருச்செந்தூர் திருத்தலம் .. இதனை நினைவுபடுத்தும் வகையில் கந்தசஷ்டியன்று கடற்கரையோரம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுவதற்கு வசதியாக இன்றும் கடல் உள்வாங்கிச் செல்லும் .. சூரசம்ஹாரம் முடிந்து முருகன் கோவிலுக்கு திரும்பும்போது மீண்டும் கடல் பழையநிலையை அடையும் ..
நமது “அகம்” என்கிற நம் மனதில் இருக்கிற பேராசை .. வெறுப்பு .. ஆணவம் .. கோபம் .. வஞ்சம்தீர்த்தல் .. கருமித்தனம் உள்பட பல்வேறு தீயகுணங்களையும் அழித்து நமக்கு நல்வழி காட்டுகிறார் முருகப்பெருமான்
ஆணவம் .. அகங்காரம் அதிகமானால் அதனை அழித்திட ஆண்டவன் அவதாரம் செய்கிறான் ..
இரண்யகசிபுவின் ஆணவத்தை மஹாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அழித்தார் ..
அகங்காரம் .. காமவெறி கொண்ட ராவணேஸ்வரனை மஹாவிஷ்ணு .. ராமனாக உருக்கொண்டு அழித்தார்
சூரபத்மாதியர்களை பரமசிவனே மறுவுருவமாக சுப்ரமண்யனாக உதித்து அழித்தார் ..
மற்ற அசுரர்கள் அழிவை “ வதம் “ என்கிறோம் .. சூரபத்ம அழிவை “ சம்ஹாரம் “ என்கிறோம் .. என்ன வேறுபாடு எனில் ..
மாமரமான சூரனை முருகன் வேலால் துளைக்க அதன் ஒருபாதி - மயிலாகி முருகனுக்கு வாகனமாகியது ..
மறுபாதி - சேவலாகியது .. அதனைக் கந்தன் கொடியாக ஏந்தினான் ..
அவர்கள் ஒப்பந்தமும் அவ்வாறே ! இருவரும் மற்றவரை ஏந்தவேண்டும் என்பதே!
இந்தமாதிரியான வினோதம் முருகப்பெருமானுக்கு மட்டுமே உகந்தது .. பகைவரையும் மன்னிக்கும் குணம்
கந்தனைப் போற்றி அவன் திருப்பாதங்களில் சரணடைவோமாக ! ஓம் சரவணபவாய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
Image may contain: 1 person
Image may contain: indoor

No comments:

Post a Comment