PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGAN PATHAM POTRI POTRI....GURUVE SARANAM SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE " GARUDA PANCHAMI " & MAY GARUDA BHAGAWAN MAKES YOUR TRAVEL THROUGH THE WORLD SMOOTHER & FREE OF OBSTACLES .. GARUDA PANCHAMI CELEBRATES THE MOTHER & SONS LOVE .. AFFECTION .. DEVOTION .. & BOND BETWEEN EACH OTHER .. THE FESTIVAL IS DEDICATED TO GARUDA BECAUSE OF DEVOTION TOWARDS HIS MOTHER KADHRU .. GARUDA POOJA IS MAINLY OBSERVED BY MARRIED WOMEN FOR THE BETTER HEALTH & FUTURE OF THEIR CHILDREN .. " JAI SHREE GARUDA DEV "





" கருடபகவானே ! உம்முடைய கூர்மையான வளைந்த அலகு எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது .. நீர் உமது புருவங்களை நெறிக்கும்போது பாம்பு நெளிவதைப் போல் அச்சமேற்படுகிறது .. உம்முடைய கோரைப்பற்களைக் காணும் எதிர்கள் .. இவை தேவேந்திரனின் வஜ்ராயுதமோ என்று கதிகலங்கிப் பின்வாங்குகிறார்கள் .. இத்தகைய பெருமைகள் கொண்ட உம்மை அடியேன் போற்றுகிறேன் .. வேதாந்த வித்தைகள் அடியேனுக்கு வசமாகும்படியாக அருள் செய்யவேண்டும் .. மேலும் எப்போதும் உமக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் தவறாமல் தந்தருளவேண்டும் என்கிறார் தேசிகர் .. 
( இந்த “கருடதண்டகத்தைப்” பாராயணம் செய்துவந்தால் எதிரிகள் தொல்லை ஒழியும் .. நோய் நொடிகள் அண்டாது .. விஷ ஜந்துக்களாலும் எந்தவிதமான துன்பமும் ஏற்படாது என்று பெரியோர் கூறுவர் )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் கருடபஞ்சமி நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. ( மதியம்வரை பஞ்சமிதிதி)பெருமாளின் வாகனமாகவும் .. கொடியாகவும் விளங்கும் கருடபகவானுக்கு உகந்த நாளாகிய இன்று கருடனைப் போன்ற பலசாலியும் .. புத்திமானாகவும் .. வீரனாகவும் மைந்தர்கள் அமைந்திடவும் .. தாங்கள் வேண்டிய அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறிடவும் .. கனிந்த வாழ்க்கை தங்களனைவருக்கும் கிடைத்திடவும் கருடபகவானைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
ஸூவர்ணபக்ஷாய தீமஹி ! 
தந்நோ கருடஹ் ப்ரசோதயாத் !!
பெருமாளின் வாகனமாகவும் .. கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது .. கருடபஞ்சமியன்று கருடவழிபாடும் .. விஷ்ணுவழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் .. இன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர் ..
வினதையின் மைந்தன் கருடனின் மாற்றந்தாய் கத்ருவின் மைந்தர்கள் நாகங்களே ! அவர்கள் செய்த சூழ்ச்சியினால் தான் வினதை அடிமையாக நேர்ந்தது 
அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவலோகம் சென்று அமிர்தம் கொண்டுவர நேர்ந்தது .. அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது .. எனவே கருட பஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம் .. மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்டநாகங்களே !
“ ஆழ்வார் “ என்ற சிறப்புப்பெயர் கருடாழ்வார்க்கு உண்டு .. பெருமாளின் தலைக்கு மேலேயும் கருடன் கருடக்கொடியாகவும் .. பெருமாளின் பாதங்களுக்கு கீழே கருடன் கருடவாகனமாகவும் திகழ்கின்றார் ..கருடமந்திரம் சக்திவாய்ந்த ஒன்று .. எதிரிகளை வெல்வதற்கும் .. விஷங்களை முறிக்கவும் மந்திர தந்திரங்களுக்கும் .. தீய சக்திகளை ஒடுக்குவதற்கும் வாதங்களில் வெல்வதற்கும் கருடமந்திரத்தை ஜபிப்பார்கள் ..
கார்கோடகன் என்னும் நாகத்தை அடக்கிப்பிடித்துள்ளதால் கருடன் சனிபகவானின் விளைவுகளை மட்டுப்படுத்துபவர் .. 
“ சுபர்னோ வாயு வாகனா “ என்பார்கள் .. வாயுபகவானே ! கருடனுக்கு வாகனமாக அமைகிறார்
கருடன் வேதசொரூபம் அதனால் குருவுக்குச் சமமானவர் .. கூடப்பிறந்த சகோதரர்களின் நலத்தையும் .. வளத்தையும் கோரும் நோன்பாக அமைகின்றது கருடபஞ்சமி .. ஆதலால் அவர்களை நமஸ்கரித்து ஆசிபெறவேண்டும் .. சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்யவேண்டும் ..

எம்பெருமான் பள்ளிகொள்ளும் ஆதிசேஷனையும் .. அவரைத் தாங்கிச்செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட்டு சுபீட்சமான வாழ்வினைப் பெறுவோமாக ! 
“ ஓம் கருடாழ்வாரே ! நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


 Image may contain: 2 people


No comments:

Post a Comment