SWAMIYE SARANAM IYYAPPA..GURUVE SARANAM SARANAM




ஸ்ரீ வில்லிபுத்தூர் ஐந்து கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது





வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் 
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்
என்று ஆண்டவனையே மணந்துகொள்வது போல் கனவு கண்ட கோதை பெரியாழ்வாருக்கு நந்தவனத்தில் கிடைத்த குழந்தை.சீராட்டி வளர்க்கப்பட்ட அவள் பெரியாழ்வார் ஆண்டவனுக்குத் தினம் சமர்ப்பிக்க வேண்டிய மாலையை தான் அணிந்து அழகு பார்ப்பாள்.ஒரு நாள் இதைக் கண்ட பெரியாழ்வார் ,வேறு மாலை தொடுத்து ரங்கநாதருக்குச் சமர்பிக்கச் சென்றார். இறைவன் கருவறையிலிருந்து “இனி
கோதை சூடிக் கொடுக்கும் மாலையையே அணிவேன்” என்ற அசரீரி கேட்டது.ஆகவேதான் அவளுக்கு சூடிக்கொடுத்த சுடற்கொடி என்ற பெயர் ஏற்பட்டது.
பெரியாழ்வார் கனவிலும்,கோவில் நிர்வாகிகள் கனவிலும், ஸ்ரீரங்க நாதர் ,
கோதையை மணக்கும் செய்தியைத் தெரிவித்தார். மன்னனிடம் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் ஸ்ரீ ரங்கத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரை தெருக்களை யெல்லாம் அலங்கரிக்கச் செய்து பல்லக்கு பரிவாரங்களை ஸ்ரீவில்லி புத்தூருக்கு அனுப்பி வைத்தான்.அங்கு கோவில் கருவறையில், ஆண்டாள் அணிந்திருந்த மாலையை, பெரியாழ்வார் எடுத்துக் கொடுக்க,அதை இறைவன் காலடியில் வைத்துவிட்டு ரங்க நாதர் அணிந்திருந்த மாலையை ஆண்டாளிடம் கொடுக்க அவள் அணிந்து கொண்டாள்.இவ்வாறு தெய்வத் திருமணம் நிகழ்ந்தது. அப்போது ஒரு பேரொளி தோன்றியது அதில் ஆண்டாள் ஐக்கியமானாள்
.” அன்பினால் எமை ஆட்கொண்ட கோதை இனி ஆண்டாள் என அழைக்கப்படுவாள்” என கருவறையிலிருந்து ஒலி கேட்டது.
ஆண்டாள் அன்பினால் இறைவனையே ஆண்டாள்!
 Image may contain: 1 person

No comments:

Post a Comment