PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGANE SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. IN TEMPLES THIS DAY IS CELEBRATED AS THE " VALAIKAAPPU " (BABY SHOWER) FESTIVAL FOR MAA SHAKTHI .. WHEN BANGLES ARE OFFERED TO SHAKTHI & THEN DISTRIBUTED TO THE DEVOTEES .. THESE BANGLES ARE SAID TO PROVIDE OFF SPRINGS & GENERALLY PROTECT US FROM ALL EVILS .. MAY YOU ALL BE BLESSED .. " OM SHAKTHI OM "


அன்னையின் திருநாள் ஆடிப்பூரத்திருநாள் ! 
அனைத்திலும் உயர்வு ! ஆடிடும் மனதை அசையா நிறுத்தி அதிலே அவளைக் கண்டிட விழைவோம் ! 
ஆடும் மயிலாம் ஆடியே வருவாள் ! 
அழகாய் எம் உள்ளில் உறைவாள் ! அகமும் புறமும் அவளை நினைந்தால் அருளைப் பொழிவாள் கருணைக்கடலாய் ! ஆடிப்பூரத்தில் அவளை நினைப்போம் ! பாடியே நிதமும் பதமலர் பணிவோம் ! 
தேடியே வருவாள் சத்தியம் இதுவே ! நாடியே நாமும் நம்பிக்கை கொள்வோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ ஆடிப்பூரத்திருவிழா நல்வாழ்த்துகளும் “ உரித்தாகுக .. இந்நாளில் அன்னையைத் துதித்து சகல நலங்களையும் .. வளங்களையும் .. நீங்காத செல்வத்தையும் தங்களனைவருக்கும் தந்தருள்வாளாக ..
ஓம் சீதளாயை ச வித்மஹே ! 
சூர்ப்பஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ மாரீ ப்ரசோதயாத் !!
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடிமாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது கொண்டாடப்படுவது .. இது தேவிக்குரிய திருநாளாகும் 
இந்நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு ..
உலகமக்களைக் காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள் .. அனைத்து உலகத்தையும் படைத்தும் .. காத்தும் .. கரந்தும் .. விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு .. சந்தனக்காப்பு . குங்குமக்காப்பு நடத்துவார்கள் .. அந்த பிரம்மாண்ட நாயகிக்கு வளைகாப்பு நடக்கும் நாள்தான் ஆடிப்பூரம் .. அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள் .. பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாளே திருவாடிப்பூரம் ..
அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சாத்துவதும் .. வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் அற்புதமான பலன்களை வாரிவழங்கக் கூடியது .. வளமான வாழ்வுதனையும் தரவல்லது ..
பக்தர்கள் காணிக்கையாகத்தரும் வளையல்களை அம்மனுக்கு சாத்திவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள் .. இதனை அணிந்துகொண்டால் இல்லத்தில் மங்களங்கள் நிறையும் என்பது நம்பிக்கை ..
ஆடிமாதத்தில் துளசித்தோட்டத்தில் அன்னை ஆண்டாள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தாள் .. அரங்கனுக்கு சூட்டவேண்டிய அரத்தினை தானே சூடிக்கொண்டு ஆடியில் அழகுபார்த்தாள் ஆண்டாள் .. தான் சூடிக்களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் “ சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்ற திருநாமம் பெற்றாள் .. அப்போது அந்தக்கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அன்னை .. தானே அவனாகப் பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினமாகிய ஆடிப்பூரத்தில் நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் அனைவரும் ஆனந்த வாழ்வினைப் பெறுவர் ..
“ ஓம் சக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, smiling, indoor


No comments:

Post a Comment