SWAMYE SARANAM..GURUVE SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA SHAKTHI .. MAY MAA BRING COUNTLESS BLESSINGS & ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS & PROSPERITY .. " JAI MAA SHAKTHI "





” நெறஞ்சமனசு உனக்குத்தானடி மகமாயி ! 
உன்னை நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி 
மறைகளும் இதைச்சொல்லுமடி மகமாயி ! 
நமை ஆளும் நாயகி நல்மகமாயி ! 
கண் இமைபோல் காத்திடுவாள் எங்கமகமாயி ! 
உமையவள் அவளே ! இமவான் மகளே ! 
சமயத்தில் வருபவள் அவளே ! எங்கள் சமயபுத்தாள் அவளே ! தஞ்சமென்று உன்னைச் சரணடைந்தோம் தஞ்சை முத்துமாரி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. பக்திகமழும் ஆடிச்செவ்வாய் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. இரண்டாம் ஆடிச்செவ்வாயாகிய இன்று தங்களனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தையும் .. சுபீட்சத்தையும் அன்னை தந்தருள்வாளாக ..
ஓம் ஸர்வஸம் மோஹின்யை வித்மஹே ! 
விஷ்வ ஜனன்யை தீமஹி ! 
தந்நஸ் சக்தி ப்ரசோதயாத் !!
ஆடிமாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து எண்ணை .. மஞ்சள் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம் .. இதனையே 
“ ஆடிச்செவ்வாய் தேடிக்குளி “ என்பார்கள் ..
ஆடிமாதம் மழைக்காலத்தின் துவக்கமாகும் .. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் .. எலுமிச்சைக்கும் உண்டு .. எனவே ஆடிவழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன ..
ஆடிமாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ”அன்னை ஒளவையார் விரதம் “ அனுஷ்டிப்பார்கள் .. இரவு 10.30க்கு மேல் பெண்கள் மட்டுமே இதனைக் கடைபிடிப்பார்கள் .. மூத்தசுமங்கலிப் பெண்கள் வழிகாட்ட இளைய பெண்கள் விரதத்தைத் தொடங்குவார்கள் ..
பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பார்கள் .. அதன் வட்வம் வித்தியாசமானதாக இருக்கும் .. அன்றைய நிவேதனங்கள் எதிலுமே உப்பு போடமாட்டார்கள் .. அனைத்தும் தயாரானதும் .. அன்னை ஒளவையாரை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள் .. ..
ஒளவையார் அன்னையின் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடு கேட்பர் .. இறுதியாக விரதநிவேதனங்கள் அனைத்தையுமே அந்த பெண்களே உண்பார்கள் .. ஆண்மக்களுக்கோ கணவருக்கோ கொடுத்தலாகாது ..
பூஜை முடிந்த உடனே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைபடுத்திவிடுவார்கள் .. இவ்வாறு விரதம் அனுஷ்டித்தால் குடும்ப ஒற்றுமை இலைக்கும் என்பது ஐதீகம் ..
அன்னையைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! 
“ ஓம் சக்தி ஓம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment