SWAMY SARANAM..GURUVE SARANAM SARANAM






பெரு வழிப்பயணம் யாவும் 
 விழித் துணையாய் வருவாய் பாலகா
தினம் தினம் உன் எழில் முகம் காண்கையிலே
என் எண்ணம் இலேசாகிப் பறக்குதய்யா
என்றுமே பழி பாவம் இல்லாத நல்ல
அமைதியைத் தாருமய்யா
வாய்மொழியின்றி நிற்கின்றேன்
வாஞ்சையோடு குரு செய்யும் பூஜையில்  
உந்தன் அழகினைப் பாடுதற்கு
உன்மத்தம் ஆகுதையா
இழந்திட ஏதுமில்லை
உந்தன் அருளொன்றே நிலையாகும்
உன்னை புகழ்ந்து பாமாலை நித்தமும் தருகின்றேன்
உந்தன் அருள் ஒன்றே போதுமைய்யா 
விதி மாற்றும் வள்ளலே
கதி  தந்த சீலனே –சபரி
பதி தன்னில் வாழ்கின்ற ஐந்து மலை வாசனே
சரணம் சரணம் உந்தன் பதியே சரணம்

No comments:

Post a Comment