” அன்னை அருளால் அவ்வுலகில் அழியாதிருக்கும் பெரியபதம் ! மன்னன் அருளால் இவுலகில் மலரோன் நிகராய் பிரம்மபதம் ! தன்னை நம்பும் அடியார்க்கும் தலைமை தருதல் உனது குணம் ! எம்மை ஆளும் பகவானே ! இன்றே அருள்வாய் அனுமானே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று சூரியனுக்கு ஒப்பானவரும் .. சஞ்சீவி பர்வதத்தை தூக்கி வந்தவருமான பாக்கியவதி அஞ்சனையின் புதல்வருமான ஆஞ்சநேய மூர்த்தியைத் துதித்து மகாபாதகங்கள் .. உபபாதகங்கள் யாவும் நீங்கப்பெற்று .. காரியசித்தி .. மனோபலமும் பெற்றிட வாயுபுத்ரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே !
வாயுபுத்ராய தீமஹி !
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத் !!
வாயுபுத்ராய தீமஹி !
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத் !!
மார்கழி மாதம் அமாவாசைத் திதி .. மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன் .. இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை பல புராணங்களிலும் உண்டு .. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும் .. சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான் .. எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும் .. பலத்தையும் .. தைரியத்தையும் கொடுக்கிறவர் .. என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு ..
ஹயக்ரீவர் .. சரஸ்வதி .. தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி .. கேள்விகளில் சிறந்து விளங்கலாம் .. எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவானையே ஒருமுறை கலங்கச் செய்தவர் .. இதனால் சனிதோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு ..
பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோவில்களிலும் தனி சன்னதியிலும் சிவாலயங்களின் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம் .. சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல் “ ராமா “ என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம் .. இவரது வழிபாட்டில் ராம நாம பஜனையும் செந்தூரப்பூச்சும் .. வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும் .. இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம் .. பாரதப் புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும் மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம ..
ஆஞ்சநேயர் பெரியவனாக வளர்ந்த பிறகு பெரியகடலை தாண்டினார் என்றாலும் சிறியவனாக இருந்தபோது பூமியிலிருந்து ஒரே தாவலில் சூரியனை எட்டிப்பிடித்தவர் .. எனவே இவர் தனது பக்தர்களுக்கு அனைத்தையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தை அருளுகிறார் ..
ஆஞ்சநேயரை மனதாரத் துதித்து அனைத்து நலன்களையும் பெறுவோமாக !
ஜெய்ஸ்ரீராம் ! ஜெய்ஸ்ரீ ஆஞ்சநேயா “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
ஜெய்ஸ்ரீராம் ! ஜெய்ஸ்ரீ ஆஞ்சநேயா “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment