அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. தட்சிணாயண புண்ணியகாலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதியான இன்று நம்மைவிட்டு .. இவ்வுலகைவிட்டு நீங்கிய நம் மூதாதையர்களை நினைந்து வழிபடுவதற்கு உகந்த நாளாகிய “ ஆடி அமாவாசையாகும் “ நாம் நம் முன்னோர்களின் ஆராதனைக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் .. அன்றைய தினத்தையே “ பித்ரு தர்ப்பணம் “ என்றழைப்பார்கள் ..
பொதுவாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம் .. அதிலும் ஆடி அமாவாசை .. மஹாளய அமாவாசை .. தை அமாவாசை .. ஆகிய மூன்று அமாவாசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினங்களாகும் ..
அமாவாசை என்றால் .. சூரியனும் .. சந்திரனும் நேர்கோட்டில் சந்திக்கும் நாளாகும் .. சூரியனை தந்தைவழி முன்னோராகவும் .. சந்திரனை தாய்வழி முன்னோராகவும் நினைத்து அவர்களது ஆன்மாவிற்கு மரியாதை செய்யும் விதமாக அமாவாசையன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் தந்து வழிபடுவர் ..
ஆடி அமாவாசை அன்று கோயில் .. குளம் .. நதிக்கரை .. கடல் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி .. நம் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் விட்டு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் .. பின்னர் வீட்டில் முன்னோர் படங்களுக்கு மலர்ச்சரம் அணிவித்து அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளுடன் பூசணிக்காய் .. வாழைக்காய் போன்ற காய்கறிகளையும் சமைத்து படைக்கவேண்டும் .. பின்னர் காகங்களுக்கும் .. அதிதிகளுக்கும் உணவளித்து அதன்பிறகே நாம் உண்ணுதல் சிறப்பாகும் .. இப்படிச்செய்தால் முன்னோர்களுடைய ஆசிகள் நமக்குப் பூரணமாகக் கிடைக்கும் .. வாழ்க்கையில் சகல வெற்றிகளையும் பெறலாம் ..
“ ஓம் பித்ரு தேவோ பவ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
No comments:
Post a Comment