PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMYE SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE FRIDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA SHAKTHI .. THE TAMIL MONTH OF AADI IS A DIVINE MONTH FILLED WITH POWER .. PROTECTION & SPIRITUAL BLESSINGS OF GODDESS MAA SHAKTHI .. AADI IS CONSIDERED AUSPICIOUS TO INVITE FEMININE ENERGY .. GOOD FORTUNE & GREAT OPPORTUNITIES TO PROGRESS IN LIFE .. DURING THIS MONTH THE ENERGY RADIATING FROM THE SUPREME SHAKTHI FILLS THE EARTH PLANE & CAN PROVIDE YOU WITH SPECIAL BLESSINGS...



" நெஞ்சினிலே நிறைஞ்சிருப்பா ! நிம்மதியைத் தந்திடுவா ! வஞ்சகரின் வாழ்வறுப்பா ! வந்தவினை தீர்த்திடுவா ! மஞ்சளிலே குளிச்சிருப்பா ! சிங்காரமாய்ச் சிரிச்சு நிப்பா ! தஞ்சம் என்று வந்துவிட்டால் தயங்காம காத்து நிப்பா ! வாரும் அம்மா தூயவளே ! எந்தன் தாயீ மாரியம்மா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை அந்தனங்களும் .. முதலாம் ஆடிவெள்ளி நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் .. சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் என்று பக்திமணம் கமழும் ஆடிமாதத்தின் முதல் வெள்ளியும் .. பிரதோஷத் திதியும் கூடிவரும் இந்நாளில் தங்களனைவருக்கும் அன்னை மாயீ சகல பாக்கியங்களையும் அள்ளித்தருவாளாக .. அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று வாழ்வின் உச்சத்தைத் தொடுவீர்களாக !
ஓம் சீதளாயை ச வித்மஹே ! 
சூர்ப்பஹஸ்தாயை தீமஹி ! 
தந்நோ மாரீ ப்ரசோதயாத் !!
பல்வேறு விதமான சாஸ்திர சம்பிரதாயங்களை நம் முன்னோர்கள் பன்னெடுங்காலமாக கடைபிடித்து வருகின்றனர் .. அவற்றுக்கு நிச்சயமாக ஏதாவது காரணமும் .. அறிவியல் முக்கியத்துவமும் இருக்கும் அந்தவகையில் ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பு என்பது சூரியனின் சஞ்சாரத்தைக்கொண்டே கணக்கிடப்படுகிறது ..
ஜோதிட சாஸ்திரத்தில் ஆடிமாதத்தை கர்கடகமாதம் என்பார்கள் .. சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் 4ம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடகராசியில் சூரியன் செல்வதே ஆடிமாதப் பிறப்பாகும் ஆடிமாதத்தில் இருந்துதான் விரதங்கள் .. பண்டிகைகள் உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது
இந்த மாதத்தை ”அம்மன்மாதம் ” என்றும் .. 
”அம்பாள்மாதம் ” என்றும் சிறப்பித்து கூறுவார்கள் .. அந்தளவுக்கு வீடுகளிலும் .. கோவில்கலிலும் விழாக்களும் .. விரதவழிபாடுகளும் களைகட்டும் ..
பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளுக்கென்றே ஓர் தனிச்சிறப்பு உண்டு .. அதிலும் ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை .. அந்தவிதத்தில் இன்று ஆடிமுதல் வெள்ளியில் பெண்கள் விரதமிருந்து கணவன் மற்றும் குடும்ப நலன் வேண்டி அம்மன் வழிபாடு செய்கின்றனர் 
சுமங்கலிப்பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும் 
திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம்கூடிவரவும் விரதம் மேற்கொள்கின்றனர் ..
கண்ணன் கீதையில் சொன்ன வழி -
” ஒரு சிறு இலையாவது முழுமனதுடன் அர்ப்பணிப்பவரைக் காத்து ரட்சிப்பேன் என்று “ 
அவன் தங்கை மாயி ! மகமாயி மணிமந்திர சேகரிக்கும் அஃதே ! அதுவே வேப்பிலை !
இலைகூட உனக்குக் கிடைக்கவில்லையா ..? சரி தண்ணீர்கிடைக்குமே ! தண்ணீர் கிடைக்கவில்லை என்று யாரும் எங்கும் .. எப்போதும் சொல்லவே முடியாதே ! என்று கண்ணன் உறுதியாகச் சொல்கின்றான் .. ஏன் ..? 
“ உன்கண்களில் இரண்டு சொட்டாவது இருக்குமே தண்ணீர் ! அதை அர்ப்பணி “ என்று .. இதோ என்று அன்னையவளின் பாதக்கமலத்தில் சமர்ப்பிப்போமாக !

“ ஓம் ஸ்ரீசக்தி ! ஜெயசக்தி ! சிவசக்தி ! நவசக்தி ! நமோ நமஹ “ .. 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


 Image may contain: 2 people

No comments:

Post a Comment