GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A HAPPY GANESH CHATHURTHI & MAY THE BLESSINGS OF LORD GANAPTHY BRING YOU PROSPERITY & HAPPINESS & SHOWER YOU WITH POWER & WISDOM TOO .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "SWAMY SARANAM GURUVE SARANAM



” அல்லல்போம் வல்வினைபோம் ! அன்னை வயிற்றிற் பிறந்த தொல்லைபோம் ! போகாத் துயரம்போம் ! நல்ல குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுதக்கால் “ 
(விவேக சிந்தாமணி)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. வேண்டுவன யாவையும் வேண்டியபடியே நல்கும் கருணைப் பெருங்கடலான கணபதியைத் துதித்து தங்களனைவரது துயர்களைந்து வாழ்வில் என்றும் மகிழ்ச்சியும் .. வசந்தமும் நிலைத்திட எல்லாம் வல்ல விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
ஆவணிமாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம் .. அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால் நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி ..
கடவுளில் முதன்மையானவர் விநாயகர் .. அதுபோல விரதங்களில் முதன்மையானது விநாயகர் சதுர்த்தி விரதமாகும் .. விநாயகரை ஆதிகாலம் முதலே வணங்கிவந்தாலும் அதனை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் பிரபலப்படுத்தியவர் பாலகங்காதர திலகர் .. 1893ம் ஆண்டிலிருந்து விநாயகர் சதுர்த்தி என்ற விழா எடுத்து விமர்சையாக கொண்டாட வழிவகுத்தார் .. அவரது விருப்பப்படி முதன்முதலாக பூனாவில் உள்ள விநாயகர் கோவிலில்தான் விமர்சையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது ..
” அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லால் பிறவாழி நீந்தல் அரிது “ என்கிறார் வள்ளுவர் .. 
ஆழி என்றால் கடல் .. இங்கு பிறவாழி என்று குறிப்பிட்டுள்ளது .. அன்பு .. ஆசை .. பாசம் நோய் போன்றவை .. 
ஒருவரிடம் அளவுகடந்த அன்பு செலுத்துகிறோம் என்றால் அது அன்புக்கடல் .. 
அந்த அன்புமிகுதியாகும்பொழுது வருவது ஆசை ..
அதுமிகுதியாகும்போது ஆசைக்கடல் ..
அதுவும் மிகுதியாகும்போது பாசக்கடல் .. 
அந்தபாசம் மிகுதியாகும்பொழுது வருவது நோய்க்கடல் .. 
இத்தகைய பிற ஆழிகளைக் கடக்கவேண்டுமென்றால் அறவாழி அந்தணனிடம் சரணாகதி அடைவதுதான் வழி .. அப்படியென்றால் யார் அவன் ..?
தர்மசிந்தனையிலே கடலைப் போன்றவன் .. அண்டசராசரங்களை படைக்கின்ற இறைவன் மற்றும் அனைத்து தெய்வங்களும் சக்திவாய்ந்தவைதான் .. அதேசமயம் முதலில் பிள்ளையார்சுழி போட்டுத்தான் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவது மரபு .. அனைத்து தெய்வங்களின் சக்திகளும் ஒன்றுசேர்ந்த அம்சமாக விளங்குகின்றவர் விநாயகர் .. ஆரைச் சரணடைந்தால் பிறவிப் பெருங்கடலைக் கடந்துவிடலாம் ..
“ இன்றுபோய் நாளைவா “ என்று சனியை எழுதவைத்துத் தந்திரத்தைக் கையாண்ட தலைவனைப் போற்றுகிறோம் ! ஏழரைச்சனியோடு எச்சனியும் விலகி எங்கள் வாழ்வில் நலம்காண வரம் தருவாய் கற்பகமே “ 
” ஓம் கம் கணபதயே நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
No automatic alt text available.

No comments:

Post a Comment