வரம்தரும் அம்மா ! வரலக்ஷ்மி எங்கள் வாழ்வினில் மங்களம் அருள் லக்ஷ்மி !
ஆதிகேசவனின் அழகு மார்பினிலே வாசம் செய்கின்ற ஆதிலக்ஷ்மி !
தங்கக் கலசமுடன் சங்குச் சக்கரமும் தாங்கி அருளுகின்ற தனலக்ஷ்மி !
பச்சை ஆடையது இடையில் துலங்கிடவே பசுமை காக்கின்ற தான்யல்க்ஷ்மி !
வெள்ளைப் பாற்கடலில் உதித்து மாலவனின் உள்ளம் ஆளுகின்ற கஜலக்ஷ்மி !
எம்மைக்காக்கவென்றே அன்னையாக வந்து தோற்றம் கொண்ட சந்தானலக்ஷ்மி !
வில்லும் அம்புடனும் சூலம் வாளுடனும் அபயம் அளிக்கின்ற வீரலக்ஷ்மி !
எட்டுக்கரங்களுடன் சுற்றிவரும் பகைகள் வெட்டி வீழ்த்துகின்ற விஜயலக்ஷ்மி !
மாயை இருள் களைந்து ஞான ஒளியேற்றி முக்தி அளிக்கும் வித்யாலக்ஷ்மி !
அஷ்டலக்ஷ்மி வடிவாக வந்திருந்து இஷ்டம் பூர்த்தி செய்யும் வரலக்ஷ்மி ! உன்னை மனமுருக வணங்கும் பக்தரெல்லாம் உய்ய அருள் செய்வாய் ராஜ்யலக்ஷ்மியே “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சர்வமங்களங்களையும் அள்ளித்தந்தருளும் திருமகள் நம் இல்லங்களில் திருவடிபதிக்கும் வரலக்ஷ்மி விரதநாளாகிய இன்று அன்னையைத் துதித்து தங்களனைவரும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்று நீண்ட ஆயுள் .. புகழ் .. செல்வம் .. நல்லாரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடனும் இனிதே வாழ்ந்திட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே !
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !!
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !!
கோடி நன்மைதரும் ஆடிவெள்ளியும் வரலக்ஷ்மி விரதமுமாகிய இன்று நாம் தேடிச்சென்று வழிபடவேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும் .. வரலக்ஷ்மி விரதம் என அழைக்கப்படும் இவ்விரதத்தை விவாகமாகிய சுமங்கலிப் பெண்களும் .. கன்னிப்பெண்களும் மஹாவிஷ்ணுவின் தேவியான லக்ஷ்மிதேவியைக் குறித்து அனுஷ்டிக்கும் மிகச்சிறப்பான விரதமாகும் .. இவ்விரதத்தை அனுஷ்டிப்பதனால் இல்லத்தில் செல்வம் கொழித்து மகிழ்ச்சி களித்தோங்கும் .. கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்கசுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர் .. கன்னிப்பெண்களுக்கு சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப்பெற்று சிறப்பான குடும்பவாழ்க்கை அமையப்பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன ..
ஆடிமாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது .. சகல சௌபாக்கியங்களையும் தந்தருளும் லக்ஷ்மியை (அஷ்டலக்ஷ்மியை) வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் (வரம்தரும் லக்ஷ்மிவிரதம்) என்றழைக்கப்பெறுகின்றது ..
இந்நாளில் பக்திசிரத்தையோடு நோன்பிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம் .. இவ்விரதத்தை நியமவிதிப்படி வீட்டினில் அனுஷ்டிப்பதனால் லக்ஷ்மிதேவி நம் வீட்டினுள் வாசஞ்செய்வாள் .. இயலாதவர்கள் ஆலயங்களுக்குச் சென்று இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம் .. ஆலயங்களில் குத்துவிளக்கேற்றி லக்ஷ்மியை ஆவகணம் செய்து பூஜித்து வழிபடுவார்கள் ..
வரலக்ஷ்மி பூஜையின் முக்கிய அம்சமே பெண்ணின் வலக்கையில் ரட்சை (காப்பு) கட்டுவதுதான் .. பூஜை முடிந்தபின் குங்குமம் .. மஞ்சள்கயிறு .. பூ .. வஸ்திரம் மங்களதிரவியங்களை சுமங்கலிகளுக்கு தானமாக கொடுப்பார்கள் ..
லக்ஷ்மிதேவி தன் பக்தர்களுக்கு பொருள்வளத்தை மட்டுமல்லாது உயர் ஞானத்தையும் அருள்கிறாள் அவள் வித்தியாசக்தியிலிருந்து நல்ல கல்வியும் தருகிறாள் .. அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் .. கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பதோ கேட்பதோ நல்லது ..
அகிலமெல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே ! எமை ஈன்ற ஆதிசக்தி தாயே ! நின்பாதம் பணிகின்றோம் ! காத்தருள்வாயாக !
ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment