PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM..GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A HAPPY & PROSPEROUS " AADIPERUKKU " TOO .. AADIPERUKKU IS A FESTIVAL OBSERVED ON THE 18TH DAY OF THE TAMIL MONTH AADI .. IN TAMIL " PERUKKU" MEANS RISING .. BUT THE RISING HERE IT INDICATES THE OVER FLOWING OF CAUVERI RIVER DUE TO THE MONSOON RAINS .. DEVOTEES TAKE BATH IN THE RIVER & WORSHIP MOTHER CAUVERY IN THE FORM OF GODDESS MAA SHAKTHI MAY YOU ALL BE BLESSED & SHOWERED WITH BEST HEALTH WEALTH & PROSPEROUS LIFE TOO .. " JAI MATA DI "



செந்தூரத்திலகம் அணிந்தவளே ! சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சினில் நிறைந்தவளே ! கருணையில் சிறந்தவளே ! அன்பர்களைக் காத்திடும் அலைமகளே ! அலைகடலிலே உதித்த ஆதிலக்ஷ்மிதாயே !அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே ! செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே ! உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே ! நின்பாதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே”
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகளும் உரித்தாகுக “ .. குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நாளில் ஆடிப்பெருக்கும் .. ஏகாதசித் திதியும் கூடிவருவது சிறப்பாகும் .. அன்னை மஹாலக்ஷ்மியின் அருட்கடாக்ஷ்ம் பெற்று என்றும் மங்களமும் .. சுபீட்சமும் தங்கள் வாழ்வில் நிலைத்திடவும் அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !!
இன்று ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆடிப்பெருக்காகும் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் .. 18 என்ற எண் ஜெயத்தைக் குறிக்கும் .. 
சித்தர்கள் - 18 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் - 18 படிகள் 
நெல் முதலான தானியங்கள் - 18 எனப் பலவும் அந்த அடிப்படையிலேயே அமைந்தன .. அதை அனுசரித்துத்தான் நீர்பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் 18 படிகளை அமைத்தார்கள் .. உடலுக்கும் .. உள்ளத்துக்கும் ஆரோக்கியத்தைத் தரும் காவிரி அன்னைக்கு “ ஆடி பதினெட்டு “ என்ற விழாவும் எடுத்தார்கள் .. இதனால்தான் 
“ நவமம் பாக்யம் உச்யதே “ என்று ஒன்பதைப் பெருமையுடன் சொல்கிறது சாஸ்திரம் .. (1+8 = 9)
தட்சிணாயன புண்யகாலம் துவங்கிய பிறகு ஸ்ரீரங்கநாதர் .. கோவிலில் இருந்து வெளியே வருகிறார் என்றால் அது ஆடிப்பெருக்கு விழாவுக்குத்தான் .. அதாவது ஸ்வாமியின் முதல் புறப்பாடு அம்மா மண்டபத்துக்குத்தான் .. மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஜீவநாடியாகத் திகழும் காவிரிப் பெண்ணை வரவேற்கவும் .. அவளுக்கு ஆசிவழங்கவும் அரங்கன் பிரியத்துடன் வருவதாக ஐதீகம் ..
இலங்கையைப் பார்த்துக்கொண்டு பள்ளிகொண்ட நிலையில் அரங்கன் இருக்கிறார் என்பார்கள் .. அதுமட்டும் அல்ல காவிரியைப் பார்த்தபடியே சேவை சாதிக்கிறார் அரங்கன் .. குதூகலத்துடன் வருகிற காவிரிதேவதைக்கு வஸ்திரம் .. திருமாங்கல்யம் .. மாங்கல்யக்குண்டு .. பழங்கள் .. நைவேத்தியம் என அரங்கனின் சார்பாக பெரிய வரவேற்பே நடைபெறும் ..
இதற்காக சர்வ அலங்காரத்துடன் அதிகாலையிலேயே அம்மா மண்டபத்துக்கு வந்து எழுந்தருள்வார் ஸ்ரீரங்கநாதர் .. பூமியையே குளிரச்செய்யும் காவிரியையும் .. மனதைக் குளிரச்செய்யும் அரங்கனையும் ஒருசேர சேவித்துவிட்டுச் செல்வார்கள் பக்தர்கள் ..
ஆயிரம் ஆயிரம் காலமாக விவசாயத்தைச் செழிக்கச்செய்வதையே கடமையாகக் கொண்டு ஓடிவந்து சேவை செய்துகொண்டிருக்கிறது காவிரி என்னும் புண்ணியநதி ..
கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பதற்கு ஏற்ப தன்னைப் பூக்களாலும் .. வளையல்களாலும் .. கனிகளாலும் .. சித்ரான்னங்களாலும் .. மஞ்சள் .. குங்குமத்தாலும் குளிர்வித்து மகிழ்கிற தம்பதியரை அந்தக் காவிரித்தாய் ஒருபோதும் கைவிடமாட்டாள் .. மாறாக அவர்களது இல்லத்தை சுபீட்சமாக்குகிறாள் . சந்ததியைப் பெருக்கி அருள்கிறாள் .. தனம் தானியம் என சகல செல்வங்களையும் தந்து காத்தருள்கிறாள் ..
“ பெருக்கு ” என்றால் பெருகுதல் என்பது மட்டுமல்ல 
“ சுத்தம் செய்தல் “ என்பதும் அதன் பொருளாகும் .. ஆடிமாதத்தில் காவிரியாறு பெருக்கெடுத்து ஓடிவரும் சிலநேரங்களில் கரையையும் தாண்டும் நிலைகூட ஏற்படும் .. அப்போது ஆற்றில் கிடக்கும் எல்லா அசுத்தங்களும் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டுவிடும் ஆறு தூய்மையாகக் காட்சியளிக்கும் அதுபோல .. மனித மனங்களிலும் ஆசை .. பொறாமை .. தீய எண்ணங்கள் .. ஆணவம் உள்ளிட்ட அனைத்தையும் பக்தி என்னும் வெள்ளத்தை உள்ளே பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதையும் “ பெருக்கு “ நமக்கு உணர்த்துகிறது ..
ஆடிப்பெருக்கு நாளில் உலகில் எங்கிருந்தாலும் சரி .. 
“ ஓம் காவேர்யை நமஹ “ என்று சொல்லி நீரடினால் காவிரி எனும் புண்ணியநதியில் நீராடிய பலன் நிச்சயம் கிடைக்கும் ..

“ ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவேரி அம்மா வா எங்களுக்கு வழித்துணையாக ! எம்மை வாழவைக்கவேண்டுமம்மா சுமங்கலியாக “ 
“ ஓம் தீர்க்க சுமங்கலி பவ “ .. 
ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


Image may contain: 1 person, indoor

No comments:

Post a Comment