” சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி !
சூரியா போற்றி ! சுதந்திரா போற்றி !
வீரியா போற்றி ! வினைகள் களைவாய் ஆதித்யா போற்றி ! போற்றி “
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி !
சூரியா போற்றி ! சுதந்திரா போற்றி !
வீரியா போற்றி ! வினைகள் களைவாய் ஆதித்யா போற்றி ! போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஆவணி முதலாம் ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவானை வழிபடுவது சிறப்பைத் தரும் .. தங்களனைவரும் அனைத்து நலன்களையும் பெற்று .. உடல் நலமும் .. மனநலமும் நல்லாரோக்கியமாகத் திகழ்ந்திட சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!
ஞாயிறு என்றாலே சூரியனைக் குறிக்கும் .. ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6 - 7 மணிவரை சூரியஹோரையே இருக்கும் .. இந்நேரத்தில் சூரியநமஸ்காரம் செய்வது சாலச்சிறந்தது ..
ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்தால் அச்சம் அகலும் .. கண்சம்மந்தமான நோய்கள் குணமடையும் என்று நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் ..
”ஒளிதரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு “ என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ..
கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும் .. முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சருமநோய்களிலிருந்தும் குணம் பெறலாம் ..
கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும் .. முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சருமநோய்களிலிருந்தும் குணம் பெறலாம் ..
எந்த மந்திரம் தெரியாவிட்டாலும் .. காலை எழுந்தவுடன் நீராடி கிழக்கு நோக்கி
“ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமோ சதா” என்று மூன்றுமுறை வணங்கினால் ஆயிரம் பலன்களை அள்ளித்தருவான் சூரியன் ..
“ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமோ சதா” என்று மூன்றுமுறை வணங்கினால் ஆயிரம் பலன்களை அள்ளித்தருவான் சூரியன் ..
“ ஓம் சூர்யாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment