SWAMY SARANAM.....GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE " AMAA SOMVAAR " TOO .. MAY LORD SHIVA BLESS YOU & GUIDE YOU & SHOWER YOU WITH PROSPERITY & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH .


" கருவான உயிருக்குப் பொருளான தெய்வம் ! 
சொல்லுக்குள் அடங்காத சிவமெனும் தெய்வம் ! 
சொல்லிவிடும் போதில் சிறப்பீயும் தெய்வம் ! 
அடியாரைக் காக்கும் அன்புமிகு தெய்வம் “ 
- ஓம் சிவாய நமஹ -
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று அமாவாசைத் திதியும் சோமவார விரதமும் கூடிவருவது சிறப்பு .. ”அமாசோமவாரம்” எனப்படும் இன்றையநாளில் தங்களனைவரது வாழ்விலும் வசந்தம் வீசி .. வளமான வாழ்வு அமைந்திடவும் .. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிபெறவும் எல்லாம் வல்ல ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
திங்கட்கிழமையும் (சோமவாரம்) அமாவாசையும் சேர்ந்துவரும் தினங்களில் விரதமிருந்து அரசமரத்தை பிரதட்சிணம் செய்வது கிடைத்ததற்கரிய பலன்களைத் தரும் .. இதுவே அமாசோமவார விரதம் என்று சிறப்பிக்கப்படுகிறது ..
இந்நாளில் அரசமரத்தைப் பிரதட்சணம் செய்து .. பின் சிவாலயதரிசனம் செய்வதும் .. அஸ்வத்த நாராயணபூஜை செய்வதும் மிகவிசேஷமாகக் கருதப்படுகிறது ..
அரசமரம் இருக்கும் இடத்தில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாகவும் .. இம்மரம் மஹாவிஷ்ணுவின் வலதுகண்ணிலிருந்து தோன்றியதாகவும் புராணங்கள் இயம்புகின்றன ..
மும்மூர்த்தி வடிவம் கொண்ட அரசமரத்தின் அடிப்பக்கம் - பிரம்மா 
நடுமரம் - விஷ்ணு 
கிளைகள் கொண்ட மேற்பாகம் - சிவன் என்பர் .. 
அரசமரத்திற்கு “ அஸ்வத்தா “ என்ற பெயரும் உண்டு .. 
அஸ்வத்தா என்றால் வழிபடுபவர்களின் பாவத்தை மறுநாளே தீர்ப்பது என்று பொருள் சொல்லப்படுகிறது .. இந்த நன்னாளில் அரசமரத்தை 108 பிரதக்ஷிணம் செய்யவேண்டும் ..
அரசமரத்தை எக்காரணம் கொண்டும் வெட்டுவது .. அதன் கிளைகளை ஒடிப்பது போன்ற தகாத செயல்களைச் செய்தால் வறுமை .. துர்மரணம் .. எடுத்தக்காரியங்களில் தடை போன்றவை ஏற்படும் .. என்று தர்மசாஸ்திரங்கள் கூறுகிறது ..
“ ஆயுர்விருத்தி பகவத் தஸ்யவர்த்தந தேஸர்வ ஸம்பத் “ என்று பத்மபுராணம் சொல்கிறது ..
அரசமரத்தைப் பார்த்ததும் வணங்கியவருக்கு ஆயுள் வளரும் .. 
கோவில்களில் உள்ள அரசமரத்திற்கு இன்னும் அதிகமான சக்தி உண்டு .. இந்த அரசமரத்தடியில் விநாயகப்பெருமான் எழுந்தருளியிருப்பார் .. அத்துடன் நாகர்சிலைகளும் அங்கு இருக்கும் .. இதனால் இது தோஷநிவர்த்தி மரமாகவும் கருதப்படுகிறது ..
அரசமரத்தை காலை 7 மணிக்கு முன் வலம்வருவது சிறப்பிக்கப்படுகிறது .. சனிக்கிழமை தவிர மற்றநாட்களில் மரத்தைத் தொடக்கூடாது .. சனிக்கிழமையன்று அரசமரத்தடியில் ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம் ..
அரசமரத்தைச் சுற்றும்போது கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டே வலம்வந்தால் கூடுதல் பலன்கிட்டும் ..
“ மூலதோ ப்ரஹ்மரூபாய !
மத்யதோ விஷ்ணு ரூபிணே ! 
அக்ரத் சிவரூபாய !
வ்ருக்ஷ் ராஜாயதே நமஹ “
அமாசோமவிரதத்தன்று அரசமரத்தைப் பூஜித்து அனைத்து தேவர்களின் நல்லாசிகளைப் பெறுவோமாக!
“ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, shoes


No comments:

Post a Comment