PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY & MAY YOUR SOUL BRIGHTEN UP WITH JOY & YOUR HOME LIGHTEN UP WITH THE DIVINE BLESSINGS OF LORD KRISHNA ON THIS " GOKULASHTAMI " & CONTINUE TO SHINE UPON YOU & YOUR FAMILY TOO .. " JAI SHREE KRISHNA "





என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன் ! நன்றும் வரலாம் ! தீதும் வரலாம் ! நண்பன்போலே கண்ணன் வருவான் ! வலியும் வரலாம் ! வாட்டம் வரலாம் ! வருடும் விரலாய் கண்ணன் வருவான் !
நேர்கோடு வட்டமாகலாம் ! நிழல்கூட விட்டுப் போகலாம் ! தாளாத துன்பம் நேர்கையில் தாயாக கண்ணன் மாறுவான் !
அவன் வருவான் ! கண்ணில் மழை துடைப்பான் !
இருள் வழிகளிலே ! புது ஒளி விதைப்பான் ! அந்தக் கண்ணனை அழகு மன்னனை தினம் பாடிவா மனமே”

அனைவருக்கும் என் அன்பார்ந்தகாலை வந்தனங்களும் .. “ கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகளும்” உரித்தாகுக .. சத்தியத்தைக் காப்பதற்காகவும் .. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும் மஹாவிஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரமே ஸ்ரீகிருஷ்ணாவதாரமாகும் ..
இன்றைய நாளில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று தங்களனைவரின் அகத்தில் என்றும் ஆனந்தம் நிலவிட ஸ்ரீகிருஷ்ணபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தாமோதராய வித்மஹே !
ருக்மணி வல்லபாய தீமஹி !
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத் !!

“ மகிழ்ச்சி வெளியில் இல்லை ! நம் மனதில் தான் இருக்கிறது “ என்பதை உலகிற்கு உணர்த்தியவர் ஸ்ரீகிருஷ்ணர் .. நாம் என்னவாக இருக்கிறோமோ அதன்படியே நமக்கு காட்சி தருபவர்தான் கிருஷ்ணர் .. இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் .. அஷ்டமி திதி .. ரோகிணி நட்சத்திரத்தன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது .. கிருஷ்ணர் பிறந்ததினம் அஷ்டமி .. ஆனால் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆடிமாதமே கொண்டாடப்படுகிறது ..

பொதுவாக சிவராத்திரியானது சிவனுக்கு சிறப்பாகும் ..
நவராத்திரி - அம்பாளுக்கு விசேஷம் ..
ராமநவமி - ராமர் பெயரில் இருக்கிறது ..
கந்தசஷ்டி - சுப்ரமணியாருடைய பெயரில் .. ஆனால் ..
கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல் .. அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து அவர் பிறந்த திதியாகிய அஷ்டமியை வைத்து
“ கோகுலாஷ்டமி “ என்று வழங்கப்படுகிறது ..

ஏனெனில் கிருஷ்ணபகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர் .. மற்றவர்களுக்கெல்லாம் அம்சாவதாரம் என்று சொல்வார்கள் .. முழுமையான அவதாரமாக கிருஷ்ணபகவானை கருதுவதால் அவர்
பிறந்த இடத்தையும் .. திதியையும் வைத்து கோகுலாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது ..

தனக்காக இல்லை என்றாலும் .. பிறருக்காக வாழ்ந்தவர் .. அதனால்தான் இவரை “ கண்ணா “ என்கிறோம் .. அதாவது கண்ணைப்போல் காப்பவன் ..
“ஜெயகிருஷ்ணா ! முகுந்தா முராரே “ என்று பாடினாலே எந்த அசுர சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது .. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நம்மை எப்போதும் காப்பார் ” என்பதே பொருளாகும் ..

ஸ்ரீகிருஷ்ணபகவானைப் போற்றுவோம் ! அனைத்து நற்பலன்களையும் பெறுவோமாக !
“ ஜெய்ஸ்ரீகிருஷ்ணா “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..




No comments:

Post a Comment