” அணுவிற்குள் அணுவும் நீ !
அண்டங்கள் அனைத்தும் நீ !
ஆள்கின்ற அரசியும் நீ ! கணுவிற்குள் கணுவும் நீ !
கரும்புக்குள் சுவையும் நீ ! கருணைக்கு எல்லையும் நீ ! விண்ணும் நீ ! மண்ணும் நீ ! விகசிக்கும் ஒளியும் நீ ! அகிலங்கள் அனைத்துக்கும் அன்னையே !
உன்னையே ! சரணென்று பணிந்துவிட்டோம் !
ஆகாய கங்கையென பொங்கிவரும் உன் கருணை மழை நனைய வந்துவிட்டோம் ! நொடியுமகலாத அன்பை உந்தன் திருவடிகளிலே தந்தெமக்கு அருளிடுவாய் ! அன்னையே சிவகாமி அம்மையே ! எமை ஈன்ற ஆதிசிவசக்தி தாயே ! போற்றி ! போற்றி”

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! ஆடிச்செவ்வாய் இறுதிநாளும் .. ஆடிக் கிருத்திகை நட்சத்திரமும் கூடிவரும் இந்நன்னாளில் அன்னை மாரியம்மனைத் துதித்து தங்களனைவரது ஆரோக்கிய வாழ்விற்கும் .. அன்னை அருளாலே வாழ்வில் துன்பங்கள் அகன்று சுபீட்சமும் மகிழ்ச்சியும் என்றும் நிலைத்திட அகிலாண்ட நாயகியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் சீதளாயை ச வித்மஹே !
சூர்ப்பஹஸ்தாயை தீமஹி !
தந்நோ மாரீ ப்ரசோதயாத் !
சூர்ப்பஹஸ்தாயை தீமஹி !
தந்நோ மாரீ ப்ரசோதயாத் !
அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை .. அதை அழகுற அணிவித்து வழிபடுவதும் நடைமுறையில் உள்ளது .. “ ஆடி “ என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஓர் அசுரனின் பெயர் .. பிரம்மதேவனை வேண்டி பலவரங்கள் பெற்றவன் .. நினைத்த மாத்திரத்தில் விரும்பிய உருவத்தினைப் பெறும் ஆற்றல் கொண்டவன் .. ஒருமுறை ஈஸ்வரனையே ஏமாற்றவிரும்பி ஈஸ்வரியின் உருவமாக உருமாறி .. ஈசனை அணுகினான் .. இதனை அறிந்த ஈசன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து அவனை அழித்தார் ..சிவனையடையும் பக்தி ஞானம் அவனுக்கிருந்த ஒரே காரணத்தால் அன்னை உமாதேவி மனமிரங்கி அவன் நினைவாக மாதங்களில் ஒன்றை “ ஆடி “ என்று பெயரிட்டு அழைத்தாள் .. அதுவே அன்னைக்கு ஆராதனை செய்யும் “ ஆடிமாதமாதமாகவே “ அமைந்தது ..
எங்கும் நீக்கமற நிறைந்து அண்டசராசரங்கள் அத்தனையையும் ஒரேலயமாக இயங்கச்செய்யும் அன்னை ஈஸ்வரியை உள்ளன்போடு வழிபட்டு .. அன்னையின் அருட்கடாக்ஷத்தையும் பெற்றிடுவோம் !
” ஓம் சக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment