PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED POORNIMAA DAY & MAY GODDESS MAA DURGA REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & MAY SHE SHOWER YOU WITH HER NINE SWAROOPA NAME .. FAME .. HEALTH .. WEALTH .. HAPPINESS .. HUMANITY .. EDUCATION .. BAKTHI & SHAKTHI .. " JAI MATA DI "SWAMY SARANAM IYYAPPA




” பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகைவிரட்டும் ! நெற்றியிலே குங்குமப்பொட்டு வெற்றிப்பாதையைக் காட்டும் ! எங்கும் சக்கரம் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலுடன் சூலமும் 
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா ! 
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் !
திங்களை முடிமேல் சூடிநிற்பாள் ! 
மங்கள வாழ்வையும் தந்திடுவாள் !
மங்கையர்க்கரசியும் அவளே ! 
அங்கையர்க்கன்னியும் அவளே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையும் .. மதியம் பௌர்ணமித் திதியும் கூடிவரும் இன்னாளில் அன்னை துர்க்காதேவியைப் போற்றித் துதித்து தங்கள் கண்ணுக்குப் புலப்படாத பகைவர்களையும் .. அவர்களது தீயசெயல்களையும் நெருங்கவிடாது தடுத்திடுவாளாக .. மற்றும் துன்பங்களி எளிதில் கடந்திடவல்ல மன உறுதியையும் தங்களனைவருக்கும் தந்தருள்வாளாக !
ஓம் காத்யாயனாய வித்மஹே ! 
கன்யகுமரி தீமஹி ! 
தந்நோ துர்கிஹ் ப்ரசோதயாத் !!
ஒளிமயமான இந்த பௌர்ணமி தினத்தில் அன்னை துர்க்காதேவியை வழிபாடு செய்யும்போது அன்னையின் அருட்கடாக்ஷ்ம் கிடைக்கப்பெற்று விசேடமான பலன்களும் நமக்கு கிடைக்கிறது ..
கிரகங்களின் அதிர்வு பெற்ற நாளே பௌர்ணமி தினமாகும் .. ஏழுகிரகங்களிற்குரிய நாட்கள் சேரும்போது கடலும் தன் இயல்பு நிலையிலிருந்து சற்று மாறி சீற்றத்துடன் கொந்தளிக்கும் .. அதற்கேற்ப மனிதனின் அறிவு .. புத்தி .. மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன .. சந்திரன் மனோகாரகன் .. மனதை ஆள்பவன் அதனால் பௌர்ணமியில் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன
“ மூவாறு கரங்களா லாயுதந் தாங்கி 
கனிந்த கண்களுடனே மங்களவாரத்து ராக்காலந் தொழுவோர் தமக்கென்ன குறை “
பொருள் - மூவாறு பதினெட்டு கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி .. கருணைகொண்ட கண்களையுடைய அன்னை துர்க்காதேவி தம்பக்தர்களுக்கு அருள்சுரக்கின்றாள் .. மேலும் நவக்கிரகங்களில் ராகுபகவானை நோக்கியவாறு அன்னையின் பார்வை அமைந்திருப்பதால் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலத்தில்
(மாலை - 3.00 - 4.30 வரை) தொழுபவர்களுக்கு வாழ்வில் எந்த குறையும் வாராது என்று இந்தப்பாடல் தெரிவிக்கிறது ..
அன்னையின் அருள்பார்வைபட்டாலே போதும் துன்பங்கள் பரந்தோடும் .. அவளது திருவடி தரிசனம் தீர்க்கமுடியாத பிரச்சினைகளையும் .. முடிவுக்குவராத வழக்குகளையும் தீர்த்திடும் ..
தடைக்கற்களைத் தகர்த்தெறிகின்ற அன்னையை வழிபட்டு தனக்கென்று தனிவெற்றியைத் தக்கவைப்போம் !
“ ஜெயஜெயதேவி ! ஜெயஜெயதேவி ஸ்ரீதுர்க்காதேவி சரணம் “ .. 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person


No comments:

Post a Comment