அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் மதியம் பௌர்ணமித் திதி முடியும் பட்சத்தில் பிரதமை ஆரம்பமாகவுள்ளது .. அதன்பின் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் மகிமைவாய்ந்த “ மஹாளயபக்ஷ்ம் “ ஆரம்பமாகின்றது .. பக்ஷ்ம் என்றால் 15 நாட்கள் .. நம் முன்னோர் பித்ருலோகத்திலிருந்து இந்த 15 நாட்கள் நம்மோடு தங்கும் காலமே “ மஹாளயபக்ஷ்ம் “ என்றழைக்கப்படுகிறது ..
நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும் .. ஒருவன் எந்தவொரு செல்வத்தை இழந்தாலும் .. வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும் .. அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும் கடக்கமுடியாத காட்டாற்று வெள்ளத்திலும் கிடைக்கும் மரக்கலன்போல பித்ருக்களின் ஆசி அமையும் .. எனவே பித்ருக்களுக்கு நாம் தர்ப்பணம் செய்வது என்பது நம்மை நாமே காத்துக்கொள்வதற்காக நாம் அணிந்துகொள்ளும் கவசத்துக்கு ஒப்பாகும் ..
இன்று 6.09.2017 முதல் மஹாளயபக்ஷ்ம் ஆரம்பமாகி வரும் அமாவாசை வரை பதினைந்து நாட்களுக்கு மஹாளய காலமாகும் .. பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் நாம் கொடுக்கும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்குச் சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அதன்பின்னரே ஒப்படைப்பாராம் .. ஆனால் மஹாளயம் ஆரம்பமாகிய நாள்தொட்டு நம் முன்னோர்களே நம் இல்லம் வந்து நாம் அளிக்கும் உணவுகளை உண்பார்களாம் .. அதனால் ஏழைகளுக்கு உணவளியுங்கள் .. அதனை நேரிடையாக அவர்களே பெற்றுக்கொள்வார்கள் .. நம் முன்னோர்களது ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம் ..
இந்த 15 நாட்களும் முன்னோர்களை வணங்கி வந்தாலே சகல சௌபாக்கியங்களும் தங்களைத் தேடிவரும் .. மஹாளய நாட்களில் பித்ருக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தி வாழ்வில் உயர்வீர்களாக ..
“ ஓம் பித்ரு தேவோ பவ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
No comments:
Post a Comment