” குணமிகு வியாழகுருபகவானே !
மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய் !
பிரஹஸ்பதி வியாழகுருபரநேசா !
கிரகதோஷமின்றி கடாட்சித் தருள்வாய் “
மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய் !
பிரஹஸ்பதி வியாழகுருபரநேசா !
கிரகதோஷமின்றி கடாட்சித் தருள்வாய் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிய இன் நன்னாளிலே குருபகவானாகிய ப்ரஹஸ்பதியை போற்றித் துதித்து தங்களனைவரது அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி குருபகவானின் அருட்கடாக்ஷ்ம் பெற்று செல்வச் செழிப்பு மேலோங்கவும் .. மனநிம்மதியான வாழ்வு அமைந்திடவும் குருபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் வ்ருஷ்பத்வஜாய வித்மஹே !
க்ருணிஹஸ்தாய தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !
அதிதேவதா ப்ரயதி தேவதா ஸஹித
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !!
க்ருணிஹஸ்தாய தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !
அதிதேவதா ப்ரயதி தேவதா ஸஹித
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !!
ஒருவர் ஜாதகத்தில் குருபலம் பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது .. குருபலமே நாம் எடுத்த காரியத்தில் வெற்றி தரும் .. குருபலம் இருந்தால் புத்திரதோஷம் .. மாங்கல்யதோஷம் .. திருமணத்தடை போன்றவை நீங்கும் ..
குருபகவானின் அம்சமாக தட்சிணாமூர்த்தி கருதப்படுகிறார் .. சிவபெருமானே தட்சிணாமூர்த்தி என்பது ஐதீகம் .. பார்வதிதேவி இமவான் மகளாகப் பிறந்து வளர்ந்தநேரத்தில் பிரம்மதேவருடைய மகன்களான - சனகன் .. சனந்தன் .. சனாதனன் .. சனத்குமரன் ஆகிய நான்கு ரிஷிகள் சிவபெருமானிடம் வந்து ஒருகோரிக்கையை வைத்தனர் .. வேதங்கள் ஆகமங்களின் உட்பொருளை உபதேசிக்க வேண்டினர் .. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு வேதங்களை உபதேசிப்பதற்காக சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவம் தாங்கியதாக புராணங்கள் கூறுகின்றன ..
குருவழிபாடு செய்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும் அவர்களிடம் செல்வச்செழிப்பு மேலோங்கும் .. சுகவாழ்வு .. மனநிம்மதி கிடைக்கும் .. மேலும் அவர் ஞானகாரகன் என்பதால் அறிவு விருத்தியடையும் மற்ற கிரகதோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் குருவை வணங்குவதால் நீங்கும் என்பது ஐதீகம் ..
“ ஓம் பிம் சிவய வசிகுருதேவாய நமஹ “
என குருபகவானைப் போற்றித் துதித்து .. தடை தடங்களிலிருந்து விடுபடுவோம் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
என குருபகவானைப் போற்றித் துதித்து .. தடை தடங்களிலிருந்து விடுபடுவோம் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment