GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE SARASWATI & AAYUDA POOJA & MAY GODDESS MAA SARASWATI BRING JOY & PROTECT YOU & BRIGHTEN YOUR LIFE WITH KNOWLEDGE & WISDOM . " JAI MAA SARASWATI DEVI NAMAHA "SWAMYSARANAM GURUVE SARANAM SARANAM


பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்த நல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும் வெங்காலுமன்பாடி 
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகலகலாவல்லியே “ 
( குமரகுருபரர் அருளியது )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் அறியும் திறனுக்கு அரணாய் இருந்து அருள்பாலித்து ஈடு இணையற்ற கல்விச் செல்வத்தை அளித்து எமை காக்கும் சக்தியாகிய அன்னை சரஸ்வதிதேவியைத் துதித்து தங்களனைவரும் சமயோசிதம் .. புத்திக்கூர்மை பெற்றுத் திகழ்ந்திட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
ப்ரம்ம பத்ன்யை ச தீமஹி ! 
தந்நோ வாணி ப்ரசோதயாத் !!
கல்விக்கு அதிபதி சரஸ்வதி .. எல்லா கலைகளுக்கும் தலைவி .. வித்யா என்றாலே ஆத்மாவை மெய்ஞானத்துக்கு இழுத்துச் செல்லும்வழி என்று பொருள் .. 
சரஸ்வதி என்ற சொல்லை 
ஸாரம் - ஸ்வ - என்று பிரிக்கலாம் .. 
“ ஸ்வ - என்பதற்கு “ தான் “ என்னும் சாரத்தை தருபவள் என்று பொருள் .. 
“ தான் ” என்ற அவள் முழுஞானத்தைத் தருபவள் .. அன்னை தருகின்ற ஞானம் பிரம்ம ஞானமாகும் ..
சரஸ்வதியைப் பூஜிக்கின்ற பக்தன் தேடுவது ஆத்மஞானம் .. தன்னடக்கம் .. ஆழ்ந்த கல்வி .. சிந்திக்கும் ஆற்றல் .. தியானம் இவையாவும் இருந்தால் “ நான் “ என்ற அகங்காரம் அழிந்துவிடுகிறது ஆத்மஞானம் பிறக்கிறது .. அதுவே மோட்சம் என்று கூறப்படுகிறது ..
அறிவுத் தெய்வமாகிய வாணி .. காளிதாசனுக்கு காட்சித் தந்தால் “ சாகுந்தலம் “ என்ற காவியம் பிறந்தது .. 
கலைமகளின் அருளால் கம்பன் ராமாயணம் எழுதினார் .. 
கலாதேவியின் அருளால் பேசவேமுடியாத குமரகுருபரர் “ மதுரைமீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்” பாடினார் ..
கல்வி நல்ல ஒழுக்கத்தை நல்குமோ .. உருவாக்குமோ?
மனவலிமையை வளர்க்கச்செய்யுமோ ? விரிந்த அறிவைத் தருமோ ? தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச்செய்யுமோ ? அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை ..இதன்மூலம் நம் அறியாமை நீங்கி அறிவு வளர்ச்சி மேலோங்கும் என்பது நம் அனைவரது நம்பிக்கையுமாகும் ..
ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்பு பொறியிலிருந்து சர்வசக்த்யாம் துர்க்கை தோன்றிய 
“ துர்க்காஷ்டமி “ நாளாகிய இன்று அன்னை சரஸ்வதியை துர்க்கையாக .. நரசிம்மதாரிணியாக வழிபடுவது சிறப்பு .. எட்டாம் நாளாகிய இன்று அன்னை ரத்னபீஜனை வதம் செய்யும் நாளாகும் ..

அன்னையைப் போற்றுவோம் ! சகல சித்திகளையும் பெற்று வாழ்வில் சிறப்புப் பேற்றினைப் பெறுவோமாக !
“ ஓம் சக்தி ஓம் ! வாணீ சகலகலா மாதா நமோஸ்துதே”






No comments:

Post a Comment