PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY DUSSEHRA & A BLESSED VIJAYADASAMI TOO .. MAY GODDESS MAA DURGA DESTROY ALL THE EVIL FORCES AROUND YOU & FILL YOUR LIFE WITH HAPPINESS & PROSPERITY .. " JAI MAATA DI "SWAMY SARANAM GURUVE SARANAM


அயிகிரி நந்தினி நந்தித மேதினி 
விஸ்வ வினோதினி நந்தனுதே ! 
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி 
விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே ! 
பகவதி ஹேஸிதி கண்ட குடும்பினி 
பூரி குடும்பினி பூரிக்ருதே ! 
ஜய ஜயஹே ! மஹிஷாசுரமர்தினி 
ரம்ய கபர்தினி ஷைலஸிதே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. முப்பெருந்தேவியும் உலக இயக்கத்தின் சக்தியாக .. ஆதாரமாக விளங்கும் அன்னையின் அருளாசியுடன் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கும் வெற்றியின் ஆரம்பநாளான “ விஜயதசமி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ..
தாய்மையைப் போற்றி வழிபாடு செய்துவந்த நவராத்திரி விழாவும் இன்றோடு நிறைவு பெறுகிறது .. முப்பெருந்தேவியரின் ஆசியும் .. அன்பும் .. அரவணைப்பும் தங்களனைவரது வாழ்வில் என்றும் நிலைத்திடவும் .. மனவலிமை .. தன்னம்பிக்கை மற்றும் வாழ்வைச் சீரானவழியில் கொண்டு நடாத்த நல்லறிவும் பெற்றிட அன்னை துர்க்காதேவியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!
தீமைகளை அழித்து (துன்பங்களை) தர்மத்தை நிலைநாட்டும் இந்தப் பத்தாம் நாள் விஜயதசமி என்றழைக்கப்படுகிறது .. 
விஜய் - வெற்றி 
தசமி - பத்து .. 
ஒவ்வொருவர் மனதிலும் உதிக்கும் அசுரத்தன்மையான எண்ணங்களை அழித்து .. வெற்றியை ஈடேற்றும் திருநாள் என்றும் இதனை கூறலாம் .. தளர்வில்லா எதிர்காலத்தை நோக்கி எழுச்சியுடன் அடியெடுத்து வைக்கும் நன்னாளாகவும் அடித்தளமிடும் ஓர் நாளாகவும் விளங்குகின்றது ..
குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் அக்ஷ்ராப்யாசம் என்னும் கல்வி கற்கத் தொடங்க ஏடுதுவக்குகின்ற அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள் .. இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றியினைத் தரும் ..
ஆலயங்களிலும் மஹிஷாசுர சங்காரம் அல்லது மானம்பூத் திருவிழா நடைபெறும் .. அதாவது தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இன்னல்களை விளைவித்துவந்த காட்டெருமை வடிவிலான மஹிசாசுரன் என்னும் அசுரனை அன்னை பராசக்தி சம்ஹாரம் செய்து வெற்றிகொள்ளும் திருநாளுமாகும்
ஆன்மாக்களைப் பீடித்துள்ள ஆணவமலம் .. அறியாமை .. மிருகத்தன்மை ஆகியவற்றை ஒன்பது தினங்களும் தேவியரைப் பூஜித்துப் பெற்ற அருளினால் அழித்தொழிப்பதையே உணர்த்துகின்றது என்றால் மிகையாகாது ..
ஒன்பது இரவுகள் சக்தியாக விளங்கிய தேவி பத்தாம் நாளாகிய இன்று லிங்கத்தைப் பூஜித்து சிவசக்தி ஐக்யஸ்வரூபிணியாக .. அர்த்தநாரிணியாக விளங்குகிறாள் .. அன்னையைப் போற்றுவோம் சகல வெற்றிகளையும் பெற்றிடுவோம் ! 
“ ஓம் சக்தி ஓம் ! துர்க்காதேவி சரணம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 2 people, people smiling

No comments:

Post a Comment