அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் இன்று புரட்டாசி மாத செவ்வாய்க்கிழமையும் .. மஹாளயபக்ஷ இறுதி நாளுமாகும் .. பித்ருக்களுக்காகவே பூஜைகளை மேற்கொண்டுவந்த நம் அனைவரையும் மேல் உலகிலிருந்து வந்த அனைத்து பித்ருக்களும் ஆசிகூறி எம்மைவிட்டு விடைபெறும் மஹாளயபக்ஷ அமாவாசை தினமுமாகும் .. இதனை புரட்டாசி மாத அமாவாசையென்றும் அழைப்பார்கள் ..
தசராவின் துவக்கத்தைக் குறிக்கும் அமாவாசை தினமே மஹாளய அமாவாசையாகும் .. நம் வாழ்க்கையில் பங்கெடுத்த அத்தனை தலைமுறையினருக்கும் .. மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாளாக இந்நாள் கருதப்படுகின்றது
(இல்லறம் சிறக்க தெய்வபுலவர்)
“ தென்புலத்தார் தெய்வம் விருந்து ஓக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை “
“ தென்புலத்தார் தெய்வம் விருந்து ஓக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை “
பிதிர்க்கும் தெய்வத்திற்கும் .. விருந்தினர்க்கும் .. இனத்திற்கும் .. தனக்கும் .. தருமம் செய்தல் தலைமையான தருமம் என்றுகூறி .. இல்லறத்தானின் கடமைகளுள் ஒன்றாக பித்ருக்களுக்கு தானம் செய்வது கடமை என வலியுறுத்தியுள்ளார்கள் ..
பித்ருவழிபாடு இல்லறவாழ்க்கைக்கு பித்ருக்களின் ஆசியும் .. ஆசீர்வாதங்களும் கிடைக்கப்பெற்று சிறப்பளிக்கின்றன என்பதனால் எம் முன்னோர்களால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .. பித்ருக்களை நாம் அவமதித்தால் .. அல்லது உதாசீனம் செய்தால் அவர்கள் எம்மை சபித்துவிடுவார்கள் என்பதும் .. அதனால் நாம் குடும்பவாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பதும் இந்துக்களின் ஐதீகம் ..
எவரொருவருக்குத் தாயில்லையோ .. தந்தையில்லையோ .. பங்காளிகள் .. நண்பர்கள் இல்லையோ .. இதுபோன்ற யாருமே அற்ற அனாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு “ நான் அளிக்கும் இந்த எள்ளும் .. நீருமானது திருப்தியை அளிக்கட்டும் ! யார்மே அனாதையல்ல ! என்று ஜாதி மதபேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் “ எனப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறது நம் சாஸ்திரம் .. இதுதான் இந்துமதத்தின் மகோன்னதம் !
மஹாளய அமாவாசையில் பித்ருக்களுக்கு நன்றிகடன் செலுத்தி வாழ்க்கையில் உயர்வீர்களாக !
“ ஓம் பித்ரு தேவோ பவ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் பித்ரு தேவோ பவ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment