PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY NAVARATRI & MAY GODDESS MAA DURGA PROTECT YOU FROM ALL EVIL FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH GOOD FORTUNE .. BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI MATA DI " ..


” காஞ்சி காமாட்சி ! மதுரை மீனாட்சி ! காசி விசாலாட்சி! கருணாம்பிகையே !
தருணம் இதுவே தயை புரிவாயம்மா ! பொன் பொருள் எல்லாம் வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா ! 
ஏன் என்று கேட்டு எம் பசி தீர்ப்பாய் !
என் அன்னை நீயே அம்மா ! 
மங்களம் வழங்கிடும் மகாசக்தியே ! 
மங்கலத் தாயே ! நீ வருவாயே ! 
என்னுயிர்த் தேவியே ! 
எங்கும் நிறைந்தவளே ! எங்கள் குலவிளக்கே ! 
பயிர்களில் உள்ள பசுமையில் கண்டோம் பரமேஸ்வரி உனையே ! சரண் உனை அடைந்தோம் சங்கரி தாயே !
சக்தி தேவி நீயே ! அரண் எனக் காப்பாய் ! அகிலாண்டேஸ்வரியே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறைப் பிரதமை முதல் நவமிவரை வருகின்ற ஒன்பது நாட்களும் நவராத்திரி விரதமாக அனுஷ்டிக்கப்படுகிறது .. ஆனால் இம்முறை பத்துநாட்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ..
அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து .. தன் அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால் தன்னை துதித்துத் தொழுகின்ற தங்களனைவரின் விருப்பங்கள் யாவும் நிறைவேறவும் .. அச்சங்கள் யாவும் விலகி வாழ்வில் உச்சத்தைத் தொட அன்னை துர்க்காதேவியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!
அசையாப் பொருள் - பரம்பொருள் என்றும் .. 
அசைவுடைய செயல் - சக்தி என்றும் கூறப்படுகிறது .. 
சக்திவழிபாடு மட்டும் நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது .. ஜீவராசிகள் யாவும் துன்பமின்றி நலமோடு வாழ விரதமிருப்பர் ..
நவம் என்றால் புதியது என்றும் .. ஒன்பது என்றும் இருபொருள் தரக்கூடிய சொல்லாகும் .. பழமையோடும் புதுமை கலந்தும் பரிணமிக்க வழிகாட்டும் விழா என்றும் கொள்ளலாம் ..
புரட்டாசி அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது .. (இம்முறை 10) நவராத்திரியின்போது ஒன்பது வகையில் மலர்வழிபாடு செய்வார்கள் .. கொலுவிருக்கும் தேவியரை ஒன்பது ராகங்களில் துதித்து ஒன்பது வகைப் பழங்கள் .. பிரசாதங்கள் படைத்து அன்னையின் மனம் மகிழ்வுறச் செய்வார்கள் ..
படைத்தல் .. காத்தல் .. அழித்தல் எனும் மூன்று சக்திகளைக்கொண்ட அன்னையின் அருள்வேண்டி பூஜைசெய்தலே நவராத்திரி வழிபாடாகும் .. துர்க்கா .. லக்ஷ்மி .. சரஸ்வதி என மூவகையாம மும்மூன்று நாட்கள் விழாவாகக் கொண்டாடுவதும் இறுதியில் அம்மனை சிம்மவாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சியாக பாரிவேட்டையும் நடைபெறும் ..
நவராத்திரி விழாவில் கொலுவைத்தல் என்பது பரம்பரையாகச் செயல்பட்டுவரும் ஓர் பக்தி நிகழ்ச்சியாகும் .. நல்லோரின் நட்பை ஏற்றுப் போற்றுதலும் .. பக்தியைப் பெருகச் செய்வதும் கொலுவின் முக்கிய நோக்கமாகும் ..
அனுதினமும் அன்னையின் பாதம் பணிவதுடன் .. நவராத்திரி நாட்களிலும் வணங்கி அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று நலம் பெறுவோமாக ! 
ஓம் சக்தி ஓம் ! துர்க்காதேவி சரணம் ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
..
 Image may contain: 1 person, standing




No comments:

Post a Comment