SWAMY SARANAM GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A HAPPY NAVARATRI TOO .. MAY MAA DURGA ILLUMINATE YOUR LIFE WITH COUNTLESS BLESSINGS OF GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI MATA DI "


 தாயே துர்க்கையே ! துயரத்தில் உன்னை நினைத்தால் நீ எல்லா உயிர்களின் துன்பத்தையும் போக்குகிறாய் !
இன்பத்தில் நினைத்தால் உலகனைத்திற்கும் நன்மை தரும் மதியை நல்குகிறாய் ! 
ஏழ்மையையும் .. துன்பத்தையும் .. பயத்தையும் போக்குபவளே ! 
எல்லோருக்கும் கருணைபுரிய எப்போதும் உருகும் நெஞ்சுடையவள் உன்னைத் தவிர யார் உளர் ? .. எமை என்றும் காத்தருள்வாயாக “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று அலைமகள் .. மலைமகள் .. கலைமகள் என முப்பெரும்தேவியரையும் துதித்து வழிபடும் உலகவாழ் இந்துக்களின் புனித நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னை துர்க்காதேவியை கவுமாரியாக அலங்காரம் செய்யவேண்டும் .. அசுரர்களை சம்ஹாரம் செய்த அன்னையை அபயம் .. வரத .. ஹஸ்தம் கொண்டவளாகவும் .. 
பாச .. அங்குசம் ஏந்தியவளாகவும் அமைத்து வழிபடவேண்டும் .. தங்களனைவரது நோய் நொடி நீங்கி ஆரோக்கியம் மேம்படவும் பிரார்த்திப்போமாக ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!
முதல் மூன்று நாட்களும் வீரத்தை உணர்த்தும் விதத்தில் துர்க்கை அம்மனுக்கும் .. 
அடுத்த மூன்றுநாட்களும் செல்வத்தை உணர்த்தும் விதத்தில் லக்ஷ்மிதேவிக்கும் .. 
இறுதி தினங்களில் கல்வியை உணர்த்தும் விதத்தில் சரஸ்வதிதேவிக்கும் பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்படும் ..
“ கடும் கோடைக்காலமும் .. மழைக்காலமும் எமனது இரண்டு கோரைப்பற்கள் “ என ஞான நூல்கள் சொல்கின்றன .. இந்த இரண்டு காலங்களிலும் பலவிதமான தொற்று நோய்கள் நம்மைத் தாக்கும் ஆபத்துகள் உண்டு .. இது உடலை பாதிக்கும் .. உடல் கெட்டால் உள்ளமும் பாதிப்பு அடையும் .. இந்தப் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காப்பவள் அம்பிகையே!
அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டே நவராத்திரி என்ற பெயரில் அம்பிகையை வழிபடுகிறோம் .. அகிலத்தில் இருக்கும் எல்லா உயிர்களிலும் அம்பிகையே இருக்கிறாள் அவளது கருணையினால்தான் அனைத்து உயிர்களும் வாழ்கின்றன என்ற தத்துவத்தை விளக்கவே இந்நாளில் சக்தி வழிபாடு செய்கின்றோம் ..
முதல் மூன்று நாட்கள் துர்க்கையை மலைமகளாக இச்சா சக்தியாக வழிபடுகிறோம் .. மங்கலவடிவமானவள் .. கருணைமயமானவள் என்று கூறப்படும் துர்க்காதேவி நமது மனதிலுள்ள ஆணவம் .. பேராசை போன்ற அசுரத்தன்மைகளை அகற்றி நம் உடல் உறுதியுடனும் .. வலிமையுடனும் திகழ அருள்புரிபவள் ...
மகா காளியான அன்னையை நீயே வைஷ்ணவி ! சக்தியும் வீரியமும் நீயே ! என்று போற்றித் துதித்து மங்கலம் .. அருள் .. ஞானம் இவற்றைப் பெறுவோமாக!
” ஓம் சக்தி ஓம் ! துர்க்காதேவி சரணம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 



No comments:

Post a Comment