GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & MAY THIS NAVARATRI FINDS YOU & YOUR LOVED ONES BEING BLESSED BY THE GODDESS MAA DURGA WITH JOY .. PROSPERITY & GOOD FORTUNES TO LAST FOREVER " JAI MATA DI " ..SWAMY SARANAM GURUVE SARANAM

  



துன்பம் மிரண்டு போகும் ! 
தீமை ஓடிப்போகும் ! துர்க்கை என்னும் பெயரைச் 
சொன்னால் அச்சமே அச்சம் கொள்ளுமே ! 
சஞ்சலங்கள் விலகும் ! வினைகள் யாவும் தீருமே ! 
தோல்வி தோற்றுப் போகும் ! 
அமைதி நெஞ்சில் கூடுமே !
ஜெய்ஸ்ரீதுர்க்கா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் மங்களங்களை தங்கள் இல்லம் தோறும் வாரிவழங்கும் வெள்ளிக்கிழமையும் .. நவராத்திரி மூன்றாம் நாளுமாகிய இன்று தமோ குணசஞ்சரியான ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரியைத் துதித்து தங்களனைவருக்கும் வீரத்தையும் .. தைரியத்தையும் ஒருநாளும் தளர்வு அறியா மனம் வேண்டியும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!
பூவுலகை காத்தருளும் எல்லாம் வல்ல ஈசனுக்கு ஒருராத்திரி அதுவே சிவராத்திரி ! ஆனால் பரப்பிரம்மமான சக்திக்கு ஒன்பது ராத்திரிகள் அதுவே நவராத்திரி ! பொதுவாக அனைத்துப் பூஜைகளும் காலைநேரத்தில் மேற்கொள்வது வழக்கம் .. ஆனால் சிவராத்திரி .. நவராத்திரி நாட்களில் மட்டுமே மாலையிலும் .. இரவிலும் பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன ..
நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்று அர்த்தம் . உலகம் அனைத்தும் சக்திமயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம் .. பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவளாவாள் அந்த அம்பிகையின் மகிமைகளை தேவி பாகவதம் விரிவாகச் சொல்கிறது ..
ஆன்மாவை இறைவன்பால் வழிப்படுத்த திருவருள் துணை நிற்கின்றது .. இந்தத் திருவருட் சக்திதான் சித்சக்தி .. பராசக்தி .. ஆதிபராசக்தி எனப்படுகிறது .. இதில் ஆதிபராசக்திதான் துர்க்கையாகும் .. இவள் நெருப்பின் அழகு .. ஆவேசப்பார்வை .. வீரத்தின் தெய்வம் .. சிவபிரியை .. இச்சாசக்தி .. கொற்றவை .. காளி என்றும் குறிப்பிடுவர் .. வீரர்களின் தொடக்கத்திலும் .. முடிவிலும் வெற்றித் தெய்வம் துர்க்கையாவாள்
இன்று மஹிஷாசுரனை வதம் செய்ய தேவியாக .. வராஹியாக அம்பிகை காட்சி தருகிறாள் .. பன்றிமுகத்தோடு காட்சியளிப்பவள் .. அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள் .. வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் இன்றாகும் .. மூன்றுகண்கள் உண்டு 
இது சிவனின் அம்சமாகும் ..
அம்பிகையின் அம்சமாக பிறந்ததால் இவள் சிவன் .. ஹரி .. சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள் .. எதையும் அடக்க வல்லவள் .. மிருகபலமும் .. தேவகுணமும் கொண்டவள் .. பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள் .. பிரளயத்தில் உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகிறாள் .. வராஹியை பூஜிக்கும் வீட்டில் தன தான்யம் பெருகும் .. வாழ்வு சிறப்பாக அமையும்
“ ஓம் சக்தி ஓம் ! ஸ்ரீதுர்க்காதேவி சரணம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 
..Image may contain: 1 person

No comments:

Post a Comment