” துர்க்கை என்று துதிப்பவரை துணைகொள்வாயே !
என்றும் எம் அருகில் இருந்து நீயும் ஆதரிப்பாயே !
உன் புகழை நாம் என்றும் மறவோம் தாயே !
உன் நாமமே என்றென்றும் பாடிடுவோமே !
துர்க்காதேவி சரணம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் முக்குணங்களுக்கும் மூலமான சர்வலோக நாயகியை நவராத்திரி தினமாகிய இன்று பூஜித்து தீமைகள் தம்மை அண்டாவண்ணமும் .. தோல்விகளே தங்கள் வாழ்விலிருந்து தோற்றுப்போய் வெற்றிகளே குவியும் வண்ணம் அன்னை துர்க்காதேவி அருள்பாலிப்பாளாக
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே !
துர்க்காயை ச தீமஹி !
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!
நவராத்திரியான ஒன்பது நட்களும் அம்பிகையின் சக்தியானது பிரவாகமாய் பரவி இருக்கும் .. அதனை நம்முள் பெற்றுக்கொள்ளும் விதமாக இந்நாட்களில் பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன ..
சக்தித் தாயை இன்று இந்திராணியாக வழிபடவேண்டும் .. மாகேந்தரி .. சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர் .. இவள் இந்திரனின் சக்தி ஆவாள் கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள் .. ஆயிரம் கண்ணுடையவள் .. யானை வாகனம் கொண்டவள் .. விருத்திராசுரனை அழித்தவள் .. தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே ! பெரிய பெரிய பதவிகளை விரும்புபவர்களுக்கு இவளது அருட்பார்வை கட்டாயம் வேண்டும் .. மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலைகிடைக்க .. பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு .. சம்பள உயர்வு கிடைக்க அருள்புரிபவளும் இந்த அன்னையே ஆவாள் ..
அன்னையைப் போற்றுவோம் ! துன்பத்தை அகற்றி ஒளிமயமான வாழ்வினைப் பெறுவோமாக !
“ ஓம் சக்தி ஓம் ! துர்க்காதேவி சரணம் “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment