PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMYSARANAM...GURUVE SARANAM,. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF MAA LAKSHMI MAY SHE GUIDE YOU FROM DARKNESS INTO THE LIGHT & ELEVATES TO A HIGHER STATE OF BEING & LIVING .. " JAI MAA LAKSHMI




 "
” செல்வத் திருமகளே ! மோகனவல்லியே ! 
எல்லோரும் கொண்டாடும் வேதவல்லியே ! 
எண்கரங்களில் சங்கு சக்கரம் வில்லும் அம்பும் 
தாமரை மின்னும் கரங்களில் நிறைகுடம் தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே ! 
வரமுத்திரை காட்டியே பொருள் வழங்கும் அன்னையே ! சிரத்தினில் மணிமகுடம் தாங்கிடும் சிந்தாமணியே ! பலவரம் வழங்கிடும் ரமாமணியே ! 
வரதராஜ சிகாமணியே ! தாயே மஹாலக்ஷ்மியே ! 
தனலக்ஷ்மியே ! சகலவளமும் தந்திடுவாய் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று ரஜோகுண சொரூபிணியும் .. ஞானசக்தியின் வடிவமான ஸ்ரீமஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவரும் அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று .. பதினாறு செல்வ வளங்களையும் தந்தருள்வாளாக ..
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே ! 
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
அன்னை மூன்று நாட்களுக்கு லக்ஷ்மியாக இருந்து நமக்கு கிரியாசக்தியை அளித்திடுவாள் .. அதாவது வேண்டிய அனைத்து செல்வங்களையும் தந்தருளி எம்மை காத்திடுவாள் .. அன்னையை வணங்குவதால் இப்பிரபஞ்சம் முழுவதும் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாகும் என்பது நிச்சயம்
மனதில் மண்டிக்கிடக்கும் அறியாமை எனும் இருளை அகற்ற ஆதவனால் இயலாது .. ஆனால் அன்னையால் இயலும் .. மக்கள் மனதிலிருந்து பயம் அகலவேண்டும் 
அவர்களை ஏழ்மை தழுவக்கூடாது .. அவர்களது அறியாமை அகன்று அறிவொளி மிளிரவேண்டும் .. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு ஆதாரமான வீரம் .. செல்வம் .. கல்வி ஆகிய மூன்றையும் பகிர்ந்தளிப்பவளும் அன்னையே ! அவளே உலகின் தாயாவாள் ..
இன்று அன்னையை “ வைஷ்ணவியாக “ பிரார்த்திப்பது சிறப்பு .. 
அம்பிகையின் கைகளில் இருந்து உருவானவள் வைஷ்ணவி .. இவள் விஷ்ணுவின் அம்சம் .. கருடனை வாகனாமாகக் கொண்டவள் .. வளமான வாழ்வு தருபவள் .. சகலசௌபாக்கியங்கள் அனைத்தையும் தருபவள் .. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு சிறந்தது .. விஷ்ணுவின் சக்தியான இவள் நீலநிறமானவள் .. ஆறுகரங்களைக் கொண்டிருப்பாள் .. வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும் .. மற்றைய கரங்களில் கதா .. தாமரை .. சங்கு .. சக்கரம் ஏந்தியவாறும் காட்சியளிப்பாள் .. விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் .. கொடியாகவும் கொண்டிருப்பாள் ..
அன்னையை தூய்மையான உள்ளத்தோடு தியானித்து துதிசெய்து மங்களநாயகியின் அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக .. 
“ ஓம் சக்தி ஓம் ! ஓம் மஹாலக்ஷ்மியே நமோஸ்துதே”
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..



No comments:

Post a Comment