இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும்
உன்கழல் தொழுதெழுவேன் !
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கி வேதியனே ! இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமகில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே “
உன்கழல் தொழுதெழுவேன் !
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கி வேதியனே ! இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமகில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று பிரதோஷமும் கூடிவருவது சிறப்பாகும் .. தங்களனைவரது கிரகதோஷங்களும் நீங்கி .. வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்றுய்ய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
தோஷங்கள் எல்லாம் நீங்கி இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் வீடுபேற்றை அளிக்கும் சக்தி பிரதோஷ விரதத்திற்கும் .. வழிபாட்டிற்கும் உண்டு ..
செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாயன்று கூடும் பிதோஷத்தன்று ஆலயம் செல்வது நன்று .. மனிதனுக்கு வரும் ரூனம் .. மற்றும் ரணத்தை நீக்கக்கூடிய பிரதோஷமே இது ..
பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பல விரதங்களுள் தலையாயது .. இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்கள் நீங்கி இன்பம் எய்துவர் .. பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 - 6.00 மணி) அலுவலக பணியில் ஈடுபட்டோரும் ஒருவிநாடியேனும் இறைவனை மனதால் நினைத்துக்கொள்வது நலம் ..
பிரதோஷவேளையில் மாலை 4.30 - 6.00 மணிவரையிலான நேரத்தில் நந்திதேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கூடாக கண்டு தரிசிக்க அனைத்து தோஷங்களும் நீங்கி நன்மை உண்டாகும் ..
இறைவழிபாடு என்றுமே குறைகளைக் களைந்து நிறைவினைத் தரும் .. அதுவும் புண்ணிய தினத்தில் வழிபடுவது ஒன்றுக்கு பலநூறுமடங்கு மிகுதியான உயர்ந்த பலன்களைத் தரவல்லது .. இகம் .. பரம் .. வீடு என்ற மும் நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் ..
“ சிவனை நினை ! சிவனை துதி ! சிவயோகம் பெறு “
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment