PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM.GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE FULL MOON DAY .. MAY SHIVSHAKTHI BLESS YOU ALL & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI SHREE SHIVSHAKTHI "


” அம்மையப்பனை அனுதினமும் தொழுது 
அவர்தம் அடிவாழ எம்மையும் ஆட்கொள்வாய் ஏகனே!
என்றும் இம்மையில் மறுமை வேண்ட தம்மோடு எம்மையும் ஆற்றுப்படுத்திய சிவபார்வதி சிநேகரையும் போற்றுதுமே “ 
ஓம் நமசிவாய !
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நாளில் பௌர்ணமித் திதியும் கூடிவருவது சிறப்பு .. புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமித் திதி பொதுவாக உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருகிறது .. இன்று உமாமஹேஸ்வர வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது .. 
அம்மையப்பனைத் துதித்து தாங்கள் நினைத்த காரியங்கள் அத்தனையும் நிறைவேறிடவும் .. கடன் தொல்லை மற்றும் காரியத்தடை அனைத்தும் நீங்கிடவும் சிவசக்தியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
உமையும் .. உமையொருபாகனும் .. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நமக்கு இன்னல்கள் வராமல் அருள்புரிகிறார்கள் .. சிவனின் மகிமையை போற்றி அவர் அருள்பெற அரிய விரதங்கள் பல உள்ளன .. அவற்றுள் ஒன்றுதான் 
“ புரட்டாசி பௌர்ணமி “ .. இன்றைய நாளில் வரும் 
உமாமஹேஸ்வர விரதம் அம்மையும் அப்பனுமாகி அண்டமெல்லாம் படைத்து காத்து அருள்ச்ருரந்தருளி இம்மைக்கும் மறுமைக்கும் தோன்றாத துணையாய் துலங்கி நிற்கும் உமாபதியின் மகிமை போற்றும் இவ்விரதத்தை கடைபிடித்து வேண்டுவன யாவும் பெறலாம் ..
அரியும் அரனும் ஒன்றே ! எங்குமாகி நிறைந்த பரம்பொருளே ! வெவ்வேறு வடிவம் தாங்கி நின்று நமக்கு அருள்புரிகிறது .. நம் மனப்பான்மைக்கு ஏற்றவாறு தாயாகவோ .. தோழனாகவோ .. நம் குழந்தையாகவோ அவரை வழிபட்டு பிறவிப்பிணி அகற்றும் மார்க்கத்தை அறிதல் சிறப்பு ..
புரட்டாசி பௌர்ணமியன்றுதான் ஈசன் திரிபுரம் எரித்ததாக புராணங்களில் கூறப்படுகின்றன .. சிவபிரானை காலையில் வழிபட்டால் - முற்பிறப்பு தீவினைகள் எல்லாம் ஒழியும் .. 
மதியம் வழிபட்டால் - முற்பிறவியோடு இப்பிறப்பு தீவினைகளும் ஒழியும் .. 
மாலையில் வழிபட்டால் - ஏழுபிறவிகள் தோறும் முற்றிய தீவினைகள் எல்லாம் ஒழிவோதடல்லாமல் விரும்பியன யாவும் வந்துசேரும் ..
அம்மையப்பனைப் போற்றுவோம் ! சகலசௌபாக்கியங்களையும் பெற்றுய்வோமாக ! 
“ ஓம் சிவசக்தி போற்றி ! ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: 2 people, people standing


No comments:

Post a Comment