” மா லக்ஷ்மி தாயே ! மலர் பூத்த மாயே !
மாலவனின் மணிமார்பில் மகிழ்ந்திருப்பாயே !
அழகுக் அழகான திருமகள் நீயே !
அகிலமெல்லாம் போற்ற அலைகடல் உதித்தாயே !
செல்வங்கள் யாவற்றிற்கும் அதிபதி நீயே !
எந்தச் செல்வம் வந்தபோதும் எந்தன் செல்வம் நீயே “
மாலவனின் மணிமார்பில் மகிழ்ந்திருப்பாயே !
அழகுக் அழகான திருமகள் நீயே !
அகிலமெல்லாம் போற்ற அலைகடல் உதித்தாயே !
செல்வங்கள் யாவற்றிற்கும் அதிபதி நீயே !
எந்தச் செல்வம் வந்தபோதும் எந்தன் செல்வம் நீயே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று சர்வ மங்களங்களையும் தங்கள் இல்லம்தோறும் வாரிவழங்கிட அன்னை மஹாலக்ஷ்மியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே !
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
இந்த பூமியே அவள்தான் .. ஒவ்வொரு மனிதரிடமும் கல்வியாக .. பொன் பொருள் என வளர்செல்வமாக
நெஞ்சுரமாக நல்வாழ்வில் விளையும் மகிழ்ச்சியாக .. கூடிவாழ்வதில் மலரும் அன்பாக .. நிறை வாழ்வில் புகழாக .. இறைவாழ்வில் நித்திய சாந்தியாக பொலிபவள் அவளே ! அன்னை மஹாலக்ஷ்மி !
நெஞ்சுரமாக நல்வாழ்வில் விளையும் மகிழ்ச்சியாக .. கூடிவாழ்வதில் மலரும் அன்பாக .. நிறை வாழ்வில் புகழாக .. இறைவாழ்வில் நித்திய சாந்தியாக பொலிபவள் அவளே ! அன்னை மஹாலக்ஷ்மி !
சர்வமங்களங்களையும் அள்ளித்தருபவள் .. அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத் தேனை அளிப்பவள் .. ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரில் வாசம் செய்பவள் .. பள்ளிகொண்ட பரந்தாமனின் திருமார்பினை அணைந்தவள் ..
வழிபடும் அன்பர்களின் துயரங்களையும் துன்பங்களையும் தொலைத்து அழிப்பவள் ஸ்ரீமஹாலக்ஷ்மி .. நம்முள் மண்டிக்கிடக்கும் தீமை எனும் தாரித்திரியத்தை அழித்து ஞானம் எனும் ஐஸ்வர்யத்தினை அருள்பவள் அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மியே !
அன்னையைப் போற்றுவோம் ! சகல நலன்களையும் பெறுவோமாக !
“ ஓம் சக்தி ஓம் ! மஹாலக்ஷ்மியே நமோஸ்துதே “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் சக்தி ஓம் ! மஹாலக்ஷ்மியே நமோஸ்துதே “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment