நீலாஞ்ஜன ஸமா பாஸம்
ரவிபுத்ரம் யமாக் ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்ரம் “
ரவிபுத்ரம் யமாக் ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்ரம் “
பொருள் - மைபோன்று கருமைநிறம் கொண்டவனே !
கருமைநிறம் கொண்டவனே ! சூரியனின் மைந்தனே !
எமதர்மனின் சகோதரனே ! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே ! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே ! சனிபகவானே ! உன்னைப் போற்றுகின்றேன் !
கருமைநிறம் கொண்டவனே ! சூரியனின் மைந்தனே !
எமதர்மனின் சகோதரனே ! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே ! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே ! சனிபகவானே ! உன்னைப் போற்றுகின்றேன் !
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 3ம் புரட்டாசிச் சனிவாரமாகிய இன்று சனீஸ்வரனைத் துதித்து சனிதிசை நடப்பில் உள்ளோர்கள் தங்கள் தோஷங்களில் இருந்து நிவாரணம் பெற்று தடைகள் நீங்கி சுபயோகம் பெற சனிபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
இந்த புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் சனிக்கிழமை விரதம் சர்வ மங்களங்களையும் அருளும் .. சனிக்கிழமையன்று இல்லாதோர் .. இயலாதோர் .. சாலையோரம் வசிப்பவர்கள் .. தொழுநோயாளிகள் .. பாரம் சுமப்பவர்கள் .. முதியோர்கள் போன்றோர்களுக்கு உணவு .. உடை வழங்குவது சிறந்த புண்ணியமாக சொல்லப்படுகிறது
சனிதிசை நடப்பில் இருப்பவர்கள் ஏழரைசனி .. அஷ்டமசனி .. கண்டசனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனியில் விரதமிருந்து சனிக்கு அதிபதியாகிய பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தாலும் தடைகள் நீங்கும் .. அனைத்து நலன்களும் பெறுவர் ..
சனிபகவான் பாகுபாடு இல்லாத தர்மவான் .. நீதிமான் என்று சனீஸ்வரரை சொல்லலாம் .. ஒருவருக்கு அவரவர் கர்மவினைப்படி பூர்வபுண்ணிய பலத்திற்கேற்ப நன்மை தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே !
சர்வமுட்டாள்களைக்கூட மிகப்பெரிய பட்டம் .. பதவி என்று அமரவைத்துவிடுவார் .. அதேநேரத்தில் அதிபுத்திசாலி .. பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கிவீசிவிடுவார் .. ஏழை .. பணக்காரன் .. படித்தவன் படிக்காதவன் .. பதவியில் இருப்பவன் .. பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனிபகவானுக்கு கிடையாது .. பலகாரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக்காட்டும் சர்வ வல்லமை படைத்த ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும் ..
சனிபகவானுக்குரிய தானியம் கறுப்பு எள் .. எள்ளைப் பொட்டலமாகக் கட்டி மண்சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால் வைத்து நல்லெண்ணைவிட்டு எரிக்கவேண்டும் .. எள்ளுச் சாதம் காகத்திற்கு வைத்துவிட்டு அதன் பின்னரே உண்ணவேண்டும் .. ( மதிய உணவு)
சனிபகவானை வணங்கி சகலதோஷங்களையும் களைவோமாக !
“ ஓம் சனீஸ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
“ ஓம் சனீஸ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
No comments:
Post a Comment