PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " SKANDASHASHTI VIRADAM " TOO .. MAY LORD MURUGA BLESS YOU & GUIDE YOU & REMOVE ALL THE EVIL FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH & HAPPINESS .. " OM MURUGA "




ஆனைமுகப் பெருமானின் தம்பியே ! 
ஆதிபராசக்தியின் புதல்வனே ! 
வள்ளிக்கு வாய்த்தவனே ! 
குன்றெல்லாம் குடிகொண்டிருக்கும் குமரப்பெருமானே ! சஷ்டிநாதனே ! 
சூரபத்மனுக்கும் பெருவாழ்வளித்த புண்ணியமூர்த்தியே ! எங்கள் தவறுகளையும் மன்னித்து அருள்வாயாக “
அனைவருக்கும் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஐப்பசிமாத முதல் சுக்கிரவாரமும் (வெள்ளிக்கிழமையும்) முருகப்பெருமானுக்கு உகந்த 
“ கந்தசஷ்டி “ விரத முதல் நாளும் கூடிவரும் இந்நாளில் சஷ்டிவேலனைத் துதித்து தாங்கள் வேண்டிய வரங்கள் யாவும் வேண்டியவாறே பெற்றிடவும் .. நோய்நொடிகள் யாவும் நீங்கி வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிலவிடவும் .. கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாஸேனாய தீமஹி ! 
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !!
கந்தசஷ்டி விரதம் ஐப்பசிமாதம் சுக்கிலபட்சத்து பிரதமைமுதல் ஆறாம்நாளான சஷ்டிதிதிவரை நோற்கப்படும் முருகப்பெருமானுக்கு உகந்த சிறப்பான நோன்பாகும் .. அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி .. மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காக சைவைப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதமாகும் ..
ஊணைஉருக்கி .. உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல்நிலைக்குத் தகுந்தாற்போல் கடைபிடிப்பர் .. 
சிலர் ஆறுநாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும் 
சிலர் பானம் மட்டும் அருந்தியும் .. 
பலர் முதல் ஐந்துநாட்களும் ஒருநேரம் உணவு உண்டு கடைசிநாளான ஆறாம்நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் .. 
ஏழாம்நாள் காலை முருகனாலயம் சென்று வழிபட்டபின் பாரணைமூலம் விரதத்தைப் பூர்த்திசெய்வர் ..
இவ்விரதத்தின் போது தினமும் கந்தசஷ்டி கவசம் .. கந்தர் அனுபூதி .. திருப்புகழ் .. கச்சியப்ப சுவாமிகளின் கந்தபுராணம் ஆகியவற்றைப் படித்தாலோ கேட்டாலோ என்னவென்று சொல்லமுடியாத ஒரு மன அமைதி கிட்டும் ..
“ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

No comments:

Post a Comment