” மூவிரு முகங்கள் போற்றி !
முகம்பொழி கருணை போற்றி !
ஏவருந் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி !
காஞ்சி மாவடி வைகுஞ்செவ்வேள் மலரடி போற்றி !
அன்னான் சேவலும் மயிலும் போற்றி !
திருக்கைவேல் போற்றி ! போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் கந்தசஷ்டி இரண்டாம் நாளாகிய இன்று கந்தப்பெருமானைப் போற்றித் துதித்து தங்கள் அனைவரும் சகலசௌபாக்கியங்களும் பெற்று .. மங்களகரமான வாழ்வினையும் பெற கந்தவேலனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாஸேநாய தீமஹி !
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !!
அனாதியாகவே செம்பில் களிம்பு போன்று ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கமும் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து இறுதியில் பிறப்பு .. இறப்பு அற்ற மோக்ஷ்நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும் ..
எனவே முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்மவினைகளை மிகவிரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம் ..
ஆணவம் .. கன்மம் .. மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம் .. கோபம் .. பேராசை .. செருக்கு .. மயக்கம் .. தற்பெருமை ஆகியவற்றை அழித்து முற்றுணர்வு வரம்பிலாற்றல் தன்வயமுடைமை .. வரம்பின்மை .. இயற்கையுணர்வு .. பேரருள் ஆகிய தேவகுணங்களை நிலைநாட்டுவதால் “ ஒப்பரும் விரதம் “ என கந்தசஷ்டி விரத மஹிமையைப் பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து கூறுகின்றது ..
கந்தனைப் போற்றுவோம் ! சகலநலன்களையும் பெறுவோமாக !
ஓம் சரவணபவாய நமஹ ! சரணம் சரணம் ஷண்முகா சரணம் “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
No comments:
Post a Comment